வைரல்

உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறது - என்ன நோய்க்கு என்ன அறிகுறி? கண்டு பிடிப்பது எப்படி?

உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறது -  என்ன நோய்க்கு என்ன அறிகுறி? கண்டு பிடிப்பது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெரும்பாலானோருக்கு காய்ச்சல், தலை வலி, தொடர் தும்மல், பரு, தேமல் போன்றவை நோயின் அறிகுறிகள் எனத் தெரியாது. அதுவே ஒரு பிரச்சனை என நினைத்துகொண்டு அதற்கு மட்டுமே வைத்தியம் பார்த்து அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அறிகுறிகளை வைத்து நோயை குணப்படுத்துவதே சரியான முறை. இங்கே சில அறிகுறிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறது -  என்ன நோய்க்கு என்ன அறிகுறி? கண்டு பிடிப்பது எப்படி?

வாயில் துர்நாற்றம் வீசினால், வாய் அல்லது வயிற்றுப் புண்கள் இருப்பதற்கான அறிகுறி.

உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறது -  என்ன நோய்க்கு என்ன அறிகுறி? கண்டு பிடிப்பது எப்படி?

முகம் பொலிவிழந்து, சோர்வாக இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து உள்ளது.

உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறது -  என்ன நோய்க்கு என்ன அறிகுறி? கண்டு பிடிப்பது எப்படி?

சிறு வயதிலே இளநரை இருந்தால், உடலில் பித்தம் அதிகமாக இருக்கலாம்.

உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறது -  என்ன நோய்க்கு என்ன அறிகுறி? கண்டு பிடிப்பது எப்படி?

நாக்கில் வெள்ளைப்படிமமாக இருந்தால், அவர்களுக்கு செரிமானப் பிரச்சனை இருக்கும். நாக்கு மிகவும் சிவப்பாக இருந்தால், அல்சருக்கான வாய்ப்பு உள்ளது. மஞ்சளாக இருப்பின், பித்தத்தின் அறிகுறி. வெளிர் நிறத்தில் நாக்கு காணப்பட்டால், ரத்தசோகையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறது -  என்ன நோய்க்கு என்ன அறிகுறி? கண்டு பிடிப்பது எப்படி?

பருக்கள், சரும பிரச்சனைகள் இருந்தால் வயிறு சுத்தமாக இல்லை என அர்த்தம்.

தூங்கி எழுந்ததும் இயற்கையாக மலம் கழிக்கும் உணர்வு ஏற்படாவிட்டால், அது மலச்சிக்கலுக்கான அடையாளம். காபி, டீ குடித்தால்தான் மலம் கழிக்க முடியும் என்று சொல்வோர், மலச்சிக்கலுக்கான வைத்தியம் பார்ப்பது நல்லது.

பல பேர் வரும் போது மலம் கழிக்கிறேன் என்பார்கள். காலையில் கழிப்பதே காலைக் கடன். மதியம், மாலை, இரவு என எந்த நேரம் வருகிறதோ அப்போது மலம் கழிப்பேன் எனச் சொல்வது ஆரோக்கியமான உடல்நலத்துக்கான அடையாளமல்ல.

இந்த அறிகுறிகளை கொண்டு நோய்களை வருமுன் காத்திடுவோம்.

banner

Related Stories

Related Stories