வைரல்

பாகிஸ்தான் போலிஸ் அதிகாரியாக முதல் சிறுபான்மையினர் இந்து பெண் தேர்வு!

பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் போலிஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் போலிஸ் அதிகாரியாக முதல் சிறுபான்மையினர் இந்து பெண் தேர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் பொது சேவை ஆணையம் காவல்துறை அதிகாரிகளுக்கான தேர்வு ஒன்றை நடத்தியது. இந்த தேர்வில் இந்து மதத்தை சேர்ந்த புஃபா கோலி என்ற இளம் பெண் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் சிந்து மாகாண துணை காவல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் காவல்துறை அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து பெண்மணி என்ற பெருமையை புஃபா கோலி பெற்றுள்ளார்.

இந்த தகவலை பாகிஸ்தானின் ஜியோஃப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம், இந்து சமூகத்தைச் சேர்ந்த சுமன் பவன் போதானி என்பவர் சிவில் மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories