வைரல்

ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வராததால் கவலைப்படுகிறீர்களா? : பயனாளர்களுக்காக வருகிறது புதிய அப்டேட்!

இன்ஸ்டாகிராமை தொடர்ந்து ஃபேஸ்புக்கிலும் லைக் எண்ணிக்கையை மறைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வராததால் கவலைப்படுகிறீர்களா? : பயனாளர்களுக்காக வருகிறது புதிய அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமூக வலைதளங்களில் லைக்ஸ் பெறுவதற்காகவே பலர் அதிக நேரத்தை அதில் செலவிட்டு வருகிறார்கள். லைக்ஸ் பெறுவதற்காக, தவறான பதிவுகளையும், புகைப்படங்களையும் பதிவிடுவதும் நடந்தேறி வருகிறது.

சில பயனாளர்கள், சமூக வலைதளங்களில் பகிரும் பதிவுகளுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிப்பதைக் கூட கவனிக்காமல் வெறும் லைக்குகள் கிடைக்கும் என்ற மனநிலையிலேயே இருக்கின்றனர்.

இதுபோன்ற செயல்களால் போட்டி மனப்பான்மை வளர்ந்து, பிறர் மத்தியில் பொறாமை குணம் போன்ற விரும்பத்தகாத உணர்வுகள் ஏற்படுவதாகவும், தங்கள் பதிவுகளுக்கு லைக்ஸ் வராவிட்டால் மனச்சோர்வு ஏற்படுவதாகவும் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வராததால் கவலைப்படுகிறீர்களா? : பயனாளர்களுக்காக வருகிறது புதிய அப்டேட்!

இதனால், மனச்சோர்வுகளை போக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போஸ்ட்களுக்கு கிடைக்கும் லைக்ஸ்களின் எண்ணிக்கையை மற்றவர்கள் பார்க்க முடியாதபடி மறைக்கும் வசதியை (Hide) இன்ஸ்டாகிராம் கொண்டு வந்துள்ளது.

இது ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து போன்ற நாடுகளில் சோதனை முயற்சியாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து ஃபேஸ்புக்கிலும் லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் புதிய அமைப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வராததால் கவலைப்படுகிறீர்களா? : பயனாளர்களுக்காக வருகிறது புதிய அப்டேட்!

இது தொடர்பாகப் பேசியுள்ள ஆப் ஆய்வாளர் ஜேன் மன்சூன், ஒரு பதிவைப் பதிவேற்றிய நபரை தவிர்த்து மற்ற எவருக்கும் அந்த போஸ்ட்டுக்கான லைக்குகளின் எண்ணிக்கை காட்டாத வகையில் குறியீட்டை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், லைக் எண்ணிக்கையை மறைப்பது தொடர்பான சோதனையைப் பரிசீலிக்க உள்ளதாகவும், இதற்கான புதிய அப்டேட் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இந்தச் சோதனை இன்னும் தொடங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories