வைரல்

திருமணமான சில நிமிடங்களிலேயே உயிரிழந்த ஜோடி... குடும்பத்தினர் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!

திருமணமான சில நிமிடங்களில் திருமண ஜோடி உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமணமான சில நிமிடங்களிலேயே உயிரிழந்த ஜோடி... குடும்பத்தினர் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த ஹார்லி மோர்கன் என்பவரும் பவுட்ரியாக்ஸ் என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்தபின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருவரும் ஏறியுள்ளனர். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இவர்களது காரின் மீது பலமாக மோதியுள்ளது. இதனால் அந்த கார் உருண்டு பலத்த விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் புதுமண தம்பதியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக பேசிய மோர்கனின் தாய், ‘அவர்களது திருமணத்துக்கு வாழ்த்த வந்தேன். அவர்களுக்கு நிறைய கனவு இருந்தது. இப்போது எல்லாம் போய்விட்டது’ என சோகமாக தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்தினர் கண்முன்னேயே புதுமணத் தம்பதி உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories