வைரல்

முடி உதிர உண்மை காரணம் என்ன? இன்டெர்நெட் சொல்லும் உடனடி வைத்தியம் பலன் தருமா?

முடி உதிர உண்மை காரணம் என்ன? இன்டெர்நெட் சொல்லும் உடனடி வைத்தியம் பலன் தருமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

யார் அடிக்கடி தலைக்குக் குளிக்கவில்லையோ அவருக்கு நிச்சயம் பொடுகு வரும். சுத்தமின்மையால் ஏற்படும் ஒரு பிரச்சனை இது. உடல் சூட்டால் மண்டைத் தோல் உலர்ந்தும்கூட, பொடுகு வரலாம். சிலருக்கு, இதே பொடுகு தொற்றாகவும் மாறக்கூடும்.

‘குளித்தல்’ என்றாலே தலைக்குளியல் என்பதுதான் பொருள். தோள்பட்டையிலிருந்து குளிப்பது, குளியலே அல்ல. கழுத்துக்கு, இடுப்புக்கு எனத் தண்ணீர் பஞ்சத்தால் குளிப்பதெல்லாம், குளியலே கிடையாது. குளியல் என்பது, அழுக்கு நீக்குவதற்கு அல்ல. உடலில் உள்ள சூட்டை, பித்தத்தைத் தணிக்கவே ‘காலைக் குளியல்’. அழுக்கு நீக்கத்தான் குளிக்கிறோம் எனச் சொன்னால், அது மாலையில் குளிப்பதை சொல்லலாம். பொடுகு பிரச்சனை, தினமும் குளித்தாலே நீங்கிவிடும். பொடுகால் உதிரும் முடியும் காப்பாற்றப்படும். தொற்றாக மாறிய பொடுகுக்கு மருத்துவம் பார்த்துக்கொள்வது மட்டுமே ஒரே தீர்வு.

'முடி கொட்டுது, உதிருது' எனப் பல்வேறு கூச்சல்களை நாம் போட்டாலும் முடியின் மேல் உள்ள கரிசனம் குழந்தையில் இருந்தே இருந்திருக்க வேண்டும். தரமான, சத்தான உணவும் முடி பராமரிப்பும் மட்டுமே முடியை வளர வைக்கும்; பாதுகாக்கும்.

உணவில் முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, சிறு கீரை, சர்க்கரைவள்ளி கிழங்கு, வால்நட், பாதாம், நெல்லிக்காய், கறிவேப்பிலை, முட்டை, கம்பஞ்சோறு, உலர் அத்தி, காய்ந்த கருப்புத் திராட்சை, பீன்ஸ், அவரை, சிறுதானிய உணவு, ஃபிளாக்ஸ் விதை, பூசணி விதை ஆகியவை சேர்த்துக்கொள்ளலாம். இதெல்லாம் ஒரு மாதம் சாப்பிட்டுவிட்டு முடி வளர்ச்சியை எதிர்ப்பார்த்தால் ஆகாது. இது உணவுப் பழக்கமாக மாற வேண்டும். 6 மாதம் முதல் ஓர் ஆண்டுக்கு பின் பலன் தெரியும்.

இதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்து, 50-100 முறை சீப்பால் வாரி விடுவது முக்கியம். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியைத் தூண்டும். சினைப்பை நீர்க்கட்டிகள், பிராஸ்டேட் வீக்கம், தைராய்டு பிரச்சனை, ஸ்ட்ரெஸ்கூட முடி உதிர துணை செய்யும். அதிகமாக முடி கொட்டுபவர்கள், இந்தப் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்!

banner

Related Stories

Related Stories