வைரல்

சசிகலாவின் பெங்களூரு சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா திரைப்பட பாடகியாக அவதாரம் !

சிறை விதிமுறைகளை மீறிய சசிகலாவின் அத்துமீறல்களை அம்பலப்படுத்திய ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா பாடகி அவதாரம் எடுத்துள்ளார்.

ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா
ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

பெங்களூரு சிறை விதிகளுக்கு முரணாக சசிகலா நடந்து கொண்டது குறித்து அம்பலப்படுத்தியவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. இவரது தைரியமான நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து ரூபாவின் புகழ் பரவியது.

ஐ.பி.எஸ்.அதிகாரியான இவர் தற்போது புதிய அவதாரமொன்றினை எடுத்துள்ளார். அதுதான் பாடகி அவதாரம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடினார்.

இவர் பாடுவதை ‘ பேயலதாதா பீமண்ணா’ என்ற கன்னட பட குழுவினர் ரசித்தனர். சிறப்பான முறையில் பாடிய இவரை இந்த படத்துக்காக ஒரு பாடலை பாடும்படி கூறினர். இந்த வேண்டுகோளை ஏற்றுதான் ரூபா பாடகியாக அவதாரம் எடுத்து பாடல் ஒன்றினை பாடியுள்ளார்.

தனது பாடல் அனுபவம் குறித்து அவர் கூறுகையில், ‘நான் பாடிய பாடலானது, டூயட் பாடல் கிடையாது. இந்துஸ்தானி இசையை நான் கற்றிருக்கிறேன். அந்த அனுபவத்திலேயே இந்த பாடலைப் பாடி முடித்தேன். இதற்காக ஒருவாரம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஜானகி, லதா மங்கேஸ்கர், வாணி ஜெயராம் ஆகியோரது பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை’ எனக்கூறியுள்ளார்.

எது எப்படியோ கன்னட திரை உலகிற்கு ஒரு புதிய பாடகி கிடைத்துவிட்டார் !

banner

Related Stories

Related Stories