வைரல்

இடுப்பளவு வெள்ளத்தில் 2 குழந்தைகளை தோள்களில் சுமந்து காப்பாற்றிய கான்ஸ்டபிள்! - நெகிழ வைக்கும் வீடியோ

குஜராத்தில் இடுப்பளவு தண்ணீரில் 1.5 கி.மீ. தூரத்திற்கு இரண்டு குழந்தைகளை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தோள்களில் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

இடுப்பளவு வெள்ளத்தில் 2 குழந்தைகளை தோள்களில் சுமந்து காப்பாற்றிய கான்ஸ்டபிள்! - நெகிழ வைக்கும் வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் வடமாநிலங்களில் பெரும் பகுதி ,கடும் மழையால் பலத்த சேதங்களை சந்தித்துள்ளது. குறிப்பாக குஜராத்தில் வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது.

இந்த கனமழையால் பல கிராமங்கள் நீரில் முழ்கியுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்துவந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி காவல்துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் முற்றிலும் பலத்த சேதமடைந்த மோர்பி கிராமத்தில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அப்படி மீட்பு பணி நடைபெறும் போது போலீஸ் கான்ஸ்டபில் ஒருவர் செய்த செயல் இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்களை குவித்து வருகிறது.

குஜராத் மோர்பி காவல்நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபில் பிருத்விராஜ் ஜடேஜா, மழை வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து முழுவிச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அப்படி மீட்பு பணியில் ஈடுபடும் போது கல்யாண்பார் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் இரண்டு குழந்தைகள் வெளிவர முடியாமல் நிலமையில் தவித்துள்ளனர். அவர்களை கான்ஸ்டபில் பிருத்விராஜ் தனது இருதோள்களிலும் அமரவைத்து சுமார் 1.5 கி.மீட்டர் தூரம், இடுப்பளவு வெள்ள நீரில் சுமந்து சென்று முகாம்களில் பத்திரமாக சேர்த்துள்ளார். ஜடேஜாவின் இந்த தன்னலமற்ற செயலை இந்திய மக்கள் மெய்சிலிர்த்து பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories