வைரல்

துப்பாக்கி முனையில் மிரட்டி மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ - அதிர்ச்சி தகவல்

டெல்லி பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் ஷோகீன், துப்பாக்கி முனையில் தனது மருமகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக மருமகள் புகார் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி முனையில் மிரட்டி மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ - அதிர்ச்சி தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

டெல்லியில் இரண்டு முறை பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர் மனோஜ் ஷோகீன். பா.ஜ.கவின் உறுப்பினராகவும் தற்போதும் நீடித்து வருகிறார். இவர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை கொடுத்தது அவரின் மருமகள் என்பது தான் அதிர்ச்சியளிக்கும் தகவல்.

மனோஜ் ஷோகின் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் “கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இரவு 12.30 மணிக்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மீரா பாக் பகுதியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தோம்.

சிறிது நேரத்தில் எனது கணவர் அவரது நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டார். அப்போது நான் தனியாக தூங்கிக்கொண்டிருந்த அறையில், எனது மாமனார் கதவை தட்டினார். நான் கதவைத் திறந்தவுடன் தூப்பாக்கி காட்டி மிரட்டி தன்னுடைய ஆசைக்கு இணங்கும் படி மிரட்டினார். அப்போது குடிபோதையில் இருந்ததால் அவரை வெளியே போகும் படி கெஞ்சினேன்.

ஆனால் அவர் என்னை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். இதை வெளியில் சொன்னால், எனது சகோதரனைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அதனால் அப்போது என்னால் புகார் தெரிவிக்கமுடியவில்லை. ஆனால் தற்போது நான் பாதுகாப்பான சூழலில் இருப்பதால் புகார் தெரிவிக்கிறேன். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories