வைரல்

காதணியை முழுங்கிய கோழிக்கு அறுவை சிகிச்சை : காதணி கிடைத்தது... ஆனால் கோழி ?

சென்னையில் கோழி ஒன்று காதணியை விழுங்கியுள்ளது. அதனால் கோழிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

காதணியை முழுங்கிய கோழிக்கு அறுவை சிகிச்சை : காதணி கிடைத்தது... ஆனால் கோழி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். அவர் வீட்டில் ஒருவருடமாக பூஞ்சி என்கிற நாட்டுக்கோழியை வளர்த்து வந்துள்ளார். அந்த கோழியை அவரின் அக்கா மகள் தீபா என்பவரும் பராமரித்து வந்துள்ளார். அதனால் அந்த கோழி தீபாவின் மீது அதிக பாசமாக இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி தீபா தன்னுடைய சிறிய காதணியை கழட்டி கீழே வைத்துவிட்டு வேலைகளை செய்துக்கொண்ருந்தார். அப்போது அங்கு வந்த கோழி, கீழே கழட்டி வைக்கப்படிருந்த காதணியை கோழி கொத்தி விழுங்கியது. இதனை கண்ட தீபா அதிர்ச்சி அடைந்து வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சிவக்குமாரும், தீபாவும் கோழியை அண்ணா நகர் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். மருத்துவரிடம் நடந்ததைக் கூறி, “தங்கம் முக்கியமில்லை, கோழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது” அதற்கு ஏற்றார்ப்போல் சிகிச்சை மேற்கொள்ளும்படி கூறியுள்ளார்கள். மருத்துவரும் கோழிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளார். அந்த காதணி கோழியின் இரைப்பையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

காதணியை முழுங்கிய கோழிக்கு அறுவை சிகிச்சை : காதணி கிடைத்தது... ஆனால் கோழி ?

தங்கம் போன்ற உலோகம் இரைப்பையில் தங்கிவிடும், கழிவுகளுடன் வெளிவராது என்பதால், அறுவை சிகிச்சை செய்து காதணியை எடுக்க மருத்துவர்கள் முடிவு எடுத்துள்ளனர். அதன்படி கோழிக்கு நேற்றைய தினம் மயக்க மருத்து செலுத்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சையின் போது செயற்கை சுவாசம் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கோழி விழுங்கிய காதணியின் கூர் முனைப்பகுதி இரைப்பையில் குத்தி கீறல்களை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அரைமணி நேர அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, பலவீனம் அடைந்த கோழி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது.

கோழி இறந்த செய்தியைக் கேட்டு சிவக்குமார் அழுது புலம்பி சோகத்தில் மூழ்கினார். பின்னர் கோழிக்கு இறுதிச்சடங்கு நடத்தி வீட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

banner

Related Stories

Related Stories