வைரல்

நேர்கொண்ட பார்வை ரிலீஸ் : ”தல” படம் பார்க்க லீவ் கேட்ட மாணவன் - அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம்

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் பார்க்க லீவு கேட்டு மாணவன் லெட்டர் கொடுத்த சம்பவம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை ரிலீஸ் : ”தல” படம் பார்க்க லீவ் கேட்ட மாணவன் - அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

இந்தியில் நடிகர் அமிதாப்பச்சன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் இன்று திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தினை வரவேற்கும் விதமாக அஜித் ரசிகர்கள் , படம் வெளியாகும் அன்றே பார்த்து விட வேண்டும் என்ற கொண்டாட்ட மனநிலையில் டிக்கெட்டுக்களை போட்டிப் போட்டு வாங்கி வந்தனர்.

இந்த நிலையில், அஜித் படத்தை பார்ப்பதற்காக லீவு கேட்டு கடிதம் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் தனது துறையின் தலைவருக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்கள் படத்திற்கு போக இருப்பதால் ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்குமாறு கேட்டு விடுமுறை கடிதம் தந்துள்ளார். இதனை படித்துப்பார்த்த துறையின் தலைவர் கடும் அதிர்ச்சி அடைந்து, மாணவனை பெற்றோரை அழைத்துவரும் படி பதில் எழுதியுள்ளார்.

மேற்படி இந்த கடிதம் வாட்ஸ் அப் குழுக்களில் வலம் வந்து வைரலாகி வருகிறது. இந்த கடிதத்தின் தொடக்கத்தில், ‘என்றும் தல அஜித்’ என்று அந்த மாணவன் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக தமிழகத்தில் திரைப்பட மோகம் அதிகமாகி வருவதால் இதுபோன்ற சம்பவங்களும் அதிகரித்து உள்ளது என கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories