வைரல்

பெண் வேடமிட்டு தப்ப முயன்ற கைதி… மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார் ! (VIDEO)

பிரேசிலில் கொள்ளையர் ஒருவர் தனது மகள் போல் வேடமிட்டு சிறையிலிருந்து தப்ப முயன்றபோது போலீசாரிடம் மாட்டிக்கொண்டார்.

பெண் வேடமிட்டு தப்ப முயன்ற கைதி… மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார் ! (VIDEO)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பிரேசிலின் பிரபல கொள்ளை கும்பல் ஒன்றின் தலைவன் க்ளாவினோ டா சில்வா. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில்வா தற்போது பிரேசில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையை விட்டு வெளியே தப்பிச் செல்ல திட்டமொன்றைத் தீட்டியுள்ளார் அவர்.

வாரந்தோறும் தன்னை வந்து பார்க்கும் தனது மகளைப் போல வேடமிட்டு அவர் வரும் நாளன்று தப்பிக்க முடிவு செய்தார். அதற்காக தன் மகள் போலவே முகமூடி, தலை முடி, உடைகளை தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சிறைக்குள் கொண்டு வந்தார். தனது மகள் வந்த நாளன்று மகள் போல முகமூடி அணிந்து அங்கிருந்து வெளியேற முயன்றார்.

ஆனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில் முகமூடி அணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்றது சில்வாதான் என்பதைக் காவலர்கள் உறுதிசெய்தனர். இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் தனது மகள் போன்று அணிந்த வேடத்தை போலீசார் முன்பு கலைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories