வைரல்

பா.ஜ.க-வுக்கு கடந்த ஓராண்டில் மட்டும் 22% சொத்துகள் அதிகரிப்பு : மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பா.ஜ.க-விற்கு கடந்த நிதியாண்டில் மட்டும் 22 சதவீதம் சொத்துகள் அதிகரித்துள்ளதாக ஏ.டி.ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க-வுக்கு கடந்த ஓராண்டில் மட்டும் 22% சொத்துகள் அதிகரிப்பு : மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் பா.ஜ.க தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. பா.ஜ.க அரசு கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது. அதற்குப் பிரதிபலனாக பாரதிய ஜனதா கட்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக அளவிலான நிதியுதவி வழங்குவதாகப் புகார் எழுந்தது.

இதனை பா.ஜ.க-வினர் மறுத்துவந்த நிலையில் தற்போது ஏ.டி.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை பா.ஜ.க-வின் வசூல் வேட்டையை அம்பலப்படுத்தியுள்ளது. ஏ.டி.ஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு ( Association of Democratic Reforms ) அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தேசிய கட்சிகளுக்குக் கடந்த ஓர் ஆண்டில் அதிகரித்த சொத்து விவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 தேசிய கட்சிகள் அளித்துள்ள தகவல்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி கடந்த நிதியாண்டில் மட்டும் பா.ஜ.க-வின் சொத்துகள் 22% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது அரசியல் கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏ.டி.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த 2017ம் ஆண்டில் 1213.13 கோடி ரூபாய் சொத்துகள் பா.ஜ.க-விடம் இருந்துள்ளது. ஆனால், 2018ம் ஆண்டில் அது 1483.35 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 22 சதவீத சொத்துகள் அதிகரித்துள்ளன.

பா.ஜ.க-வுக்கு கடந்த ஓராண்டில் மட்டும் 22% சொத்துகள் அதிகரிப்பு : மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் 15.26 கோடி அளவிற்குக் குறைந்துள்ளது. அதாவது 2017ம் ஆண்டில் 854.75 கோடியாக இருந்த சொத்துக்கள் 2018ம் ஆண்டு 724.35 கோடியாகக் குறைந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 5.30 சதவீத சொத்துக்கள் அதிகரித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 10.89% சொத்துகள் அதிகரித்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5.60 சதவீத சொத்துகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3.95 சதவீத சொத்துகளும் அதிகரித்துள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் ஓராண்டில் மட்டும் 16.39% குறைந்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories