வைரல்

கோவையில் அரசு நிலத்தை திருடி தன் பெயரில் பதிவு செய்த அமைச்சர் : ஆதாரங்களை அடுக்கும் அறப்போர் இயக்கம் 

கோவையில் அரசுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து சொந்த கட்டிடம் கட்டிக்கொண்டதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவையில் அரசு நிலத்தை திருடி தன் பெயரில் பதிவு செய்த அமைச்சர் : ஆதாரங்களை அடுக்கும் அறப்போர் இயக்கம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் ஆட்சி செய்யும் அமைச்சர்களின் மீது தொடர்ந்து முறைகேடு புகார்கள் பதிவாகி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அனைத்து துறை அமைச்சர்களும் மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது குறித்து ஆதாரத்துடன் பல இடங்களில் புகார் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் வேலுமணி கோவையில் அரசுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக அதிமுக அமைச்சர்கள் இரண்டு பேருக்கு சிலை கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளதாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அமைச்சர் வேலுமணி சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அங்கு செயல்பட்டுவந்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை தகரக் கொட்டகையில் அமைத்துக் கொடுத்து விட்டு, “அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமி” என்ற பெயரில் கட்டிடத்தை கட்டி அதை எஸ்.பி.வேலுமணி தனது அறக்கட்டளையின் பெயருக்கு மாற்றியுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறப்போர் இயக்கம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம் ஆர்.எஸ். புரம் பகுதியில் 23வது மாநகராட்சி வார்டு பகுதியில் உள்ள ராமச்சந்திரா வீதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சுகாதாரத்துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டது.

இதனையடுத்து, அங்கு செயல்பட்டு வந்த சுகாதார ஆய்வாளர் அலுலகத்தை தற்காலிகமாக மேற்கு மண்டல அலுவலகத்தில் தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு அங்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சுகாதாரத்துறை அலுவலகம் மற்றும் வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.1.75 கோடி செலவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அங்கு ஒரு பிரம்மாண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த கட்டிடத்தில் சுகாதார ஆய்வாளர் அலுலகம் செயல்படும் என மக்களும் அதிகாரிகளும் எதிர்பார்த்த நிலையில், அதை சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு கொடுக்காமல் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது சகோதரர் எஸ்.பி அன்பரசன் நடத்தும் அறக்கட்டளைக்கு முறைகேடாக ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த கட்டிடத்தில், “அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமி” என்கிற பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டு, அதனுடைய துவக்க விழா பிப்ரவரி 3ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த துவக்க நிகழ்ச்சிக்கு கோவை மாநகராட்சி ஆணையர், கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் பங்கேற்பதன் மூலம் இதனை ஒரு அரசு விழாவாக காட்ட முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோவையில் அரசு நிலத்தை திருடி தன் பெயரில் பதிவு செய்த அமைச்சர் : ஆதாரங்களை அடுக்கும் அறப்போர் இயக்கம் 

ஆனால் அரசுக்கும் அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதே உண்மை. இதற்கு மாறாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான சுகாதாரத் துறையின் இடத்தை அமைச்சரின் சொந்த அறக்கட்டளையின் பெயருக்கு மாற்றியுள்ளனர். இதற்கு துவக்க விழாவையும் நடத்தியுள்ளார்கள் என்பதை அறப்போர் இயக்கம் ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அலுவலகத்தை புது அலுவலகத்தில் இயங்கவிடாமல் தகரக் கொட்டகையில் தள்ளியுள்ளது இந்த அதிமுக அரசு. இவ்வாறு மக்கள் பணத்தை தன்னுடைய சொந்த தேவைக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயன்படுத்தியுள்ளார். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கும் எஸ்.பி.வேலுமணி அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் பணத்தை மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விபரங்கள் கேட்டபோது, கோவை மாநகராட்சி நிர்வாகம், விபரங்களை தரமறுத்து சட்டவிரோதமாக நிராகரித்துள்ளது. மேலும் அமைச்சரின் அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்ட மன்ற தீர்மானம் குறித்த ஒப்பந்த விவரங்கள் அனைத்தும் மறைத்து வைத்துள்ளனர்.

முன்னதாக கோவை மாநகராட்சி டெண்டர்கள், ஏலம் சம்பந்தப்பட்ட அனைத்தும் இணையதளத்தில் உள்ளது. ஆனால் அமைச்சரின் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட டெண்டர்கள் மற்றும் ஏலம் விவரங்கள் மட்டும் இணையதளத்தில் இல்லை என புகார்கள் எழுந்துள்ளது. இதன் மூலம் அமைச்சர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் சம்பந்தம் உள்ளது என்றே தெரிகிறது.

ஆகவே, இந்த முறைகேடு மற்றும் ஊழல் குறித்த முகாந்திரம் தெளிவாக இருப்பதால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் பிற சட்டங்களில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories