வைரல்

யோகா செய்ய வந்தவர்களுக்கு ஸ்வீட் ஸ்நாக்ஸ் - யோகா நிகழ்ச்சிக்கு ரூ140 கோடி செலவு செய்த மத்திய அரசு!

கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட ரூ.140 கோடியை பா.ஜ.க அரசு செலவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யோகா செய்ய வந்தவர்களுக்கு ஸ்வீட் ஸ்நாக்ஸ் - யோகா நிகழ்ச்சிக்கு ரூ140 கோடி செலவு செய்த மத்திய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த 2014ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து தற்போதுவரை மத்திய அரசு சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் பா.ஜ.கவினர் யோகவை விளம்பரப்படுத்த நிகழ்ச்சி நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி தவறாமல் கலந்து கொள்வதை உறுதி செய்து வருகிறார். அப்படி மோடி பங்கேற்கும் யோகா நிகழ்ச்சிகளுக்கு அரசு பணத்தில் இருந்து செலவு செய்ததாக தற்போது தகவல் அம்பமலமாகியுள்ளது. யோகாவை பிரபலப்படுத்த மக்கள் பணத்தில் இருந்து அவர்கள் செலவு செய்த தொகை மேலும் அதிர்ச்சியை வைக்கிறது.

கடந்த ஜூலை 21ம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இந்த யோக தினத்திற்காக ரூ.40 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆயுர்வேதம், சித்தா மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) அமைச்சகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி கடந்த ஆண்டு யோக நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்த தொகையை ஒப்பிடும் போது இந்தாண்டு, இரண்டு மடங்கு அதிகமாக செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

யோகா செய்ய வந்தவர்களுக்கு ஸ்வீட் ஸ்நாக்ஸ் - யோகா நிகழ்ச்சிக்கு ரூ140 கோடி செலவு செய்த மத்திய அரசு!

அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தில் சுமார் 40 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இரு மடங்கு அதிகம் என்றும், கடந்த ஆண்டு இது 20 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு 20 கோடி செலவு செய்ததாகவும், 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செலவு மட்டும் ரூ.73 கோடியும் செலவு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் Business Line நாளிதழின் ஆர்.டி.ஐ கேள்வி மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த யோகா நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் யோகா செய்வதற்கான மேட், போக்குவரத்து ஏற்பாடுகள் செய்தது, விருந்தினருக்கு தேவையான வசதிகளை ஏற்பாடு செய்துகொடுத்தால் போன்றவற்றிகாக இந்த செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அது போக யோக பயிற்சி செய்தவர்களுக்கு அதிக கலோரிகள் கொண்ட சிற்றுண்டி மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டுள்ளது. உடல் எடையைக் குறைக்கவும், சீராக வைக்கவும் வழங்கப்படும் யோகா பயிற்சியின் போது இப்படிப்பட்ட உணவு வகைகள் கொடுக்கப்பட்டது ஏன் என்ற முரண் எழுகிறது.

இதுவரையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் "சர்வதேச யோகா தினம்" கொண்டாட ஆயுஷ் அமைச்சகம் மொத்தம் ரூ.140 கோடியை செலவு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த முறையான ரேசன் பொருட்கள் கிடைக்காமல் அப்பாவி மக்கள் உணவின்றி உயிரிழக்கின்றனர். விவசாயிகள் உரிய நிவாரணம் கிடைக்காமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் பிணங்களை கையில் தூக்கிச் செல்லும் அவல நிலை நீடிக்கிறது. இன்னும் அந்த 140 கோடி ரூபாயில் பல தேவைகளை நிறைவேற்றியிருக்கலாம். யோகாவை ஒரு மத அடையாளமாக பிரபலப்படுத்த முயற்சிக்கிறது பா.ஜ.க. மத உணர்வு அரசு மக்களிடம் இருந்து அவர்களை பிரிக்கிறது. மக்களின் பிரச்னைகளுக்கு பதில் மதித்தினை வளர்க்கும் வேலை தான் பா.ஜ.கவுக்கு முக்கியம். இப்படி ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் வரை ஏராளமான மூடத்தனங்களை மக்கள் சந்திக்க வேண்டியது தான் விதி!

banner

Related Stories

Related Stories