வைரல்

ஏரியை பார்வையிடச் சென்ற தன்னார்வலர்கள் கைது : அரசு செய்யவேண்டிய பணியை மக்கள் செய்தால் கைதா?

சென்னையில் உள்ள ஏரியை ஆய்வு செய்ய அறப்போர் இயக்கத்தினர் சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தன்னார்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏரியை பார்வையிடச் சென்ற தன்னார்வலர்கள் கைது : அரசு செய்யவேண்டிய பணியை மக்கள் செய்தால் கைதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தை ஆட்சி செய்யும் அ.தி.மு.க அரசு மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை முன்பே பராமரிக்காததன் விளைவு தான் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி. தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் பல பகுதிகளில் இளைஞர்கள், தன்னார்வலர்கள் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பல மாவட்டங்களில் தன்னார்வலர்களின் முயற்சியால் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது.

அதன் படி சென்னையில் இயங்கி வரும் அறப்போர் இயக்கம் அத்தகைய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அறப்போர் இயக்கம் நீர்நிலைகளை ஆய்வு செய்து அதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திடம் மனு அளித்தும், தன்னார்வலர்கள் கொண்டு அதை சரி செய்ய தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்.

இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு சென்னை தரமணியில் உள்ள கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்ய சுமார் 15 தன்னார்வலர்கள் சென்றுள்ளார்கள். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் சார்பில் ஒருவர் கூறுகையில், "இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்போது ஆய்வு செய்ய விடாமல் காவல்துறையினர் இடைமறித்து ஆய்வை நிறுத்துமாறு கூறினர்கள். ஏன் என்று கேட்டதற்கு, தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தேவராஜ், உங்களிடம் அனுமதி இல்லை, அதனால் ஆய்வை நிறுத்துங்கள் என்றார்.

நாங்கள் வழக்கமாக நீர்நிலைகளை ஆய்வு செய்து அரசாங்கத்துக்கு மனு அளிப்பது வழக்கம். இதற்காக இதுவரை எப்போதும் அனுமதி பெற்றதில்லை. இதற்கு ஏன் அனுமதி பெற வேண்டும் என்று கேட்டதற்கு, ஆய்வு செய்வதை நிறுத்துங்கள். இல்லை என்றால் கைது செய்யபடுவீர்கள்" என்று ஏரியை பார்வையிட்டுக் கொண்டிருந்த எங்களை கைது செய்து செய்துள்ளனர்.

பின்னர் அவர்களை தரமணி 100 அடி சாலையில் உள்ள ஹேமா மஹாலில் அடைத்துள்ளனர். இது தன்னார்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசு செய்யவேண்டிய வேலைகளை தன்னார்வலர்கள் செய்தால் அவர்களை கைது செய்வது ஜனநாயக விரோதம் என தன்னார்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories