வைரல்

‘ஜெயில் பிரியாணி ஆர்டர் பண்ணிட்டேன்.. நீங்க? ’ : வேறமாதிரி யோசித்து ஹிட் அடித்த கேரள சிறைத்துறை !

கேரளாவின் வையூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகள் சமைத்து வழங்கும் பிரியாணி படுஜோராக ஆன்லைனில் விற்பனையாகி வருகிறது.

‘ஜெயில் பிரியாணி ஆர்டர் பண்ணிட்டேன்.. நீங்க? ’ : வேறமாதிரி யோசித்து ஹிட் அடித்த கேரள சிறைத்துறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குற்றச் செயலில் ஈடுபட்டு சிறைக்கு சென்றபின் சிறையில் கைதிகளை நல்வழிப்படுத்தவும், அவர்கள் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு சிறையில் தொழில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. கைதிகளின் உழைப்பால் தயாரிக்கப்படும் பொருட்கள் பின் சந்தைபடுத்தப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒருபகுதி கைதிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு முறையில் இந்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மற்ற மாநிலங்களைவிட கேரள ஒருபடி மேலே சென்று அசத்தி வருகிறது. இதற்காக கேரள சிறைத்துறைக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கேரளாவின் வையூர் மத்திய சிறைச்சாலையில், கடந்த 2011ம் ஆண்டு முதன் முதலில் இந்த சிறையில் உள்ள கைதிகளே நாள்தோறும் சப்பாத்திகளை சமைத்து விற்பனை செய்து விற்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து பேக்கரி வகைகள், உணவுகள், அசைவ குழம்பு வகைகள் மற்றும் பிரியாணி ஆகியவை சமைத்தது விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு, அது செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதிக வருவாய் கிடைத்ததோடு, சிறைத்துறையும் இதன் மூலம் வருவாய் ஈட்டியது.

இதனையடுத்து, மேலும் இந்த விற்பனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சிறை நிர்வாகம் முடிவெடுத்து, கேரளாவில் வையூர் பகுதியில் உணவு டெலிவரி செய்யும் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

‘ஜெயில் பிரியாணி ஆர்டர் பண்ணிட்டேன்.. நீங்க? ’ : வேறமாதிரி யோசித்து ஹிட் அடித்த கேரள சிறைத்துறை !

இந்த ஒப்பந்தத்தையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், அவர்களில் திருப்தி அடைய வைக்கும் வகையில் பிரியாணி காம்போ பேக்கேஜ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். 127 ரூபாய் விலைக் கொண்ட இந்த காம்போ பேக்கில், 300 கிராம் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ், 3 சப்பாத்திகள், ஒரு கப் கேக், சாலட், ஊறுகாய், தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை வகைகள் தர முடியாம என்னும் ஆச்சர்யத்திற்கேற்ப, தரமான உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால், கேரள மக்கள் ஆன்லைனில் ஆர்டர்களை குவித்து வருகின்றனர். இந்த வரவேற்பை கண்டு சிறை நிர்வாகமும், கைதிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த சிறப்பான திட்டத்தால் கேரளா சிறைத்துறையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories