வைரல்

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம் : பயந்து மேடைக்கு அடியில் ஒளிந்த செய்தியாளர்கள் (வீடியோ)

நேரலையின் போது நில நடுக்கத்தை உணர்ந்து மேஜைக்கு கீழே ஒளிந்துகொண்ட செய்தி வாசிப்பாளர்களின் வீடியோ வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம் : பயந்து மேடைக்கு அடியில் ஒளிந்த செய்தியாளர்கள் (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் ரிட்ஜ் கிர்ரேஸ்ட் நகரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இதனால் சாலைகளிலும், கடைகளிலும் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

அதேபோல், சில அடுக்குமாடி கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தெற்கு கலிஃபோர்னியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. இது மிகவும் மோசமான அளவு ஆகும். இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில், செய்தி சேனலில் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது வாசிப்பாளர்களுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்துள்ளனர். இதனால் நேரலையிலேயே அச்சமடைந்த அவர்கள் மேஜைக்கு அடியில் ஒளிந்துக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது செய்தி தொலைக்காட்சியின் ஸ்டுடியோவில் நில அதிர்வு உணரப்பட்டது நேரலையில் பதிவாகியுள்ளதை அந்த செய்தி நிறுவனம் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

மேலும், கலிஃபோர்னியா மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories