வைரல்

‘ஜெய் ஸ்ரீராம்’ அடுத்து ‘கோ மாதா கி ஜே’ : வட இந்தியாவில் அதிகரிக்கும் இந்துத்வா அராஜகம்

மத்தியபிரதேசத்தில் பசுமாடுகளை ஏற்றிச்சென்றதாக கூறி 25 பேர் மீது பசு குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜெய் ஸ்ரீராம்’ அடுத்து ‘கோ மாதா கி ஜே’ : வட இந்தியாவில் அதிகரிக்கும் இந்துத்வா அராஜகம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியபிரதேசத்தில் இருந்து ஒரு சில விவசாயிகள் விற்பனைக்காக பசுமாடுகளை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஏற்றிச் சென்றுள்ளனர். அப்போது மத்தியபிரதேச மாநில பசு குண்டர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் மாடுகளை ஏற்றிச்சென்ற 25 பேரை சிறை பிடித்து, மாடுகளை ஏற்றிவந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர். மாடுகளை ஏற்றிவந்த 25 பேரையும், அவர்களை வரிசையாக மண்டியிட வைத்து, கயிற்றால் கைகளை பிணைத்துக் கட்டி முட்டி போட வைத்துள்ளனர். அவர்களை 2 கி.மீ. தூரத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு முட்டிப்போட்டபடியே அழைத்துச் சென்றனர். போகும் வழி முழுவதும் அவர்களது கைகளால் காதுகளை பிடித்தபடி, தோப்புக்கரணம் போட்டபடியே 'கோ மாதா கி ஜே’ என்று முழக்கம் எழுப்பும் படி தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த 100க்கும் மேற்ப்பட்ட பசு குண்டர்கள் பெரிய தடிகளை வைத்து அவர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மத்தியபிரதேச மாநிலம் கந்த்வா காவல்நிலையத்துக்கு அவர்களை பசு குண்டர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச் செல்கிறார்கள் என்று அவர்கள் மீது வழக்குப்பதிய புகார் அளித்துள்ளனர்.

அதன் பின் இவர்கள் அளித்த புகாரின் அடைப்படையில், உரிய அனுமதி இல்லாமல் பசுக்களை ஏற்றிச் சென்றதாக 25 பேரின் மீதும், அவர்கள் பசுக்களை ஏற்றிச் சென்ற 21 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பசுக்களை ‘கோசாலை’களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதனையடுத்து, பசு ஏற்றிச் சென்றவர்களை அவமரியாதையாக நடத்தியதாக பசு குண்டர்களின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பசு குண்டர்கள் அப்பாவி மக்களை தாக்கியதற்கு அவர்கள் மீது மட்டும்தான் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தது வெறும் கண் துடைப்பு என்று சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories