வைரல்

5 மாத சேமிப்பு... 2 லட்ச ரூபாய் ஸ்போர்ட்ஸ் பைக்... சாதித்த Zomato டெலிவரி பாய் சூரஜ் !

Zomato, Uber Eats, Swiggy போன்ற உணவு டெலிவரிக்கான ஆப்கள் சமீபகாலமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. அதில் சாதித்த ஒரு இளைஞரைப் பற்றிய வெற்றிக் கதைதான் இது. 

5 மாத சேமிப்பு... 2 லட்ச ரூபாய் ஸ்போர்ட்ஸ் பைக்... சாதித்த Zomato டெலிவரி பாய் சூரஜ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

ஹரியானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்தவர் சூரஜ். இவர் Zomato உணவு டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது ஐந்து சம்பள பணத்தை சேமித்து, 2 லட்ச ரூபாய் கனவு பைக்கை வாங்கிய சம்பவம் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து Zomato நிறுவனர் தீபீந்தர் கோயல், இளைஞர் சூரஜின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், “நீங்கள் போதுமான அளவு கடினமாக உழைத்தால், உங்களைத் தடுக்க எதுவும் இல்லை என்று மக்களுக்குச் சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “ சூரஜ் தனது புதிய கே.டி.எம் ஆர்.சி 200 பைக்கில் உணவு வழங்குவதை நீங்கள் கண்டால், அவருக்கு மறக்காமல் ஒரு ஹாய் சொல்லுங்கள்” என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

சூரஜின் இந்த வெற்றிக்குப் பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். சூரஜ் வைத்துள்ள வண்டி எப்படியும் 2 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கும். அந்த பைக்கை வாங்குவதற்கு சூரஜ் இரவும் பகலும் கடினமாக உழைத்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது. சூரஜின் இந்த செயல் முயன்றால் முடியாதது ஏதுமில்லை என நமக்கு நினைவூட்டுகிறது என்று பலர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பைக்கின் விலை 2 லட்ச ரூபாய். 5 மாத ஊதியத்தை சேமித்து இந்த பைக்கை வாங்கி இருக்கிறார் எனில், மாதம் சுமார் 50 ஆயிரம் சம்பாதித்து இருக்க வேண்டும். அப்படியானால், இந்த தொழிலில் இவ்வுளவு அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்புள்ளதா? என்று பலரும் ஆச்சர்யமாக கேள்வி எழுப்பியும் எழுப்பியுள்ளனர்.

தற்போது இருக்கும் போட்டிகள் நிறைந்த உலகில், தொழில்நுட்பம் பல்வேறு வாய்ப்புகளை அளித்துள்ளது. சூரஜின் இந்த செயல் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும் செயலாக அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories