வைரல்

வைரலாகும் “பாட்டில் கேப் சேலஞ்ச்” : இணையத்தைக் கலக்கும் பிரபலங்கள்! (வீடியோ)

உலகம் முழுவதும் வைரலாகும் பாட்டில் கேப் சேலஞ்ச், பல பிரபலங்கள் காலால் பாட்டிலின் மூடியை திறந்து இந்த சேலஞ்ச் செய்து வருகின்றனர்.

வைரலாகும் “பாட்டில் கேப் சேலஞ்ச்” : இணையத்தைக் கலக்கும் பிரபலங்கள்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆன்லைனில் சேலஞ்ச்கள் முன்னெடுக்கப்பட்டு சில ஆண்டுகளாக அவ்வப்போது வைரலாகி வருவது வழக்கமாகிவிட்டது. கடந்த ஆண்டுகளில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் வைரலானது. ஐஸ் கட்டிகள் நிறைந்த பக்கெட்டை தங்கள் மீது ஊற்றிக்கொள்ள வேண்டும். இது தான் அந்த சேலஞ்ச்.

அதன் பின்பு கீகீ சேலஞ்ச் எனப்படும் ஓடும் காரில் இருந்து இறங்கி பாடலுக்கு நடனம் ஆடுவது. அதன்பின்பு தற்போது பிளிப் பாட்டில் சேலஞ்ச் எனும் பாட்டில் மூடியை காலால் உதைத்து திறக்கும் புதிய சேலஞ்ச் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அதன்படி பாட்டிலுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் காலால் உதைத்து மூடியைக் கழற்ற வேண்டும். பல்வேறு தரப்பினரும் இதனைச் செய்து வரும் நிலையில் இந்த லேட்டஸ்ட் டிரண்டை முதலில் யுஎஃஏ குத்துச்சண்டை சாம்பியனான மேக்ஸ் ஹோலோவே சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

அவரை தொடர்ந்து பாடகர் ஜான் மேயரும் இதனை முயற்சி செய்து வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்தார்.

இந்தியாவில் நடிகை யாஷிகா ஆனந்த் இதனை செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories