வைரல்

3,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிலைக்குள் மழைநீர் கசிவு! (வீடியோ)

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையின் உள்ளே அமைந்துள்ள பார்வையாளர் கேலரியில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

 3,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிலைக்குள் மழைநீர் கசிவு! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதை நதிக்கரையில், ஒற்றுமை சிலை எனப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 899 கோடி செலவில் 182 மீ உயரம் உள்ளதாக இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கட்டுவதற்கு 42 மாதங்கள் ஆனது. உலகில் மிக உயரமான சிலை இது என பெருமையாகப் பேசப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இந்த சிலையை திறந்து வைத்தார்.

மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் சூழலில் பல ஆயிரம் கோடியில் இந்த சிலை தேவையா என இந்த சிலைக்கு எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்புகளை மோடி அரசு சற்றும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிலை அமைப்பதில் மும்முரமாகச் செயல்பட்டது.

இந்நிலையில், அந்த சிலை பகுதியை சுற்றுலா தளமாக அறிவித்து தினமும் மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். படேல் சிலையில் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சிலையின் மார்புப் பகுதியில் அமைந்துள்ள பார்வையாளர் கேலரியில் மழைநீர் புகுந்துள்ளது. இதனைக் கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிலையின் உள்பகுதில் மழைநீர் கொட்டுவதை வீடியோ எடுத்து மக்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஒரு மழைக்கே இந்த சிலைக்குள் மழை என்றால் பெரிய மழை பெய்தால் என்னவாகும் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

படேல் சிலைக்குள் நீர் உட்புகும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. படேல் சிலை திறக்கப்பட்ட பிறகு வரும் முதல் பருவ மழை என்பதால் `முதல் மழைக்கே 3000 கோடி ரூபாய் சிலை தாங்கவில்லை’ என்பது போன்ற கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories