வைரல்

தொடர்ந்து தாக்கப்படும் அரசு அதிகாரிகள் - உத்தரபிரதேசத்தில் பா.ஜ.கவினர் அராஜகம்

மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் மீது பா.ஜ.க நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து தாக்கப்படும் அரசு அதிகாரிகள் - உத்தரபிரதேசத்தில் பா.ஜ.கவினர் அராஜகம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு பா.ஜ.க எம்.எல்.ஏ ஆகாஷ் என்பவர் நகராட்சி அதிகாரியை கிரிகெட் மட்டையால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் இருந்த போலீசார் அரசு அதிகாரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அரசு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய வழக்கில் பா..ஜக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்று மூன்று நாட்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் உத்தரப் பிரதேசம் சத்னா நகர் பகுதியில் பஞ்சாயத்து சுகாதாரா தலைமை அலுவலராக பணியாற்றி வந்த தேவ்ரத்னா சோனி என்பவரை தாக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் அதிகாரிகளின் கருத்துக்களை தெரிவிக்கவிடாமல் பா.ஜ.க நிர்வாகி சுஷில் படேல் கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகாதார அலுவலர் சோனி அவர்களை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார். இதனிடையே அதிகாரிகளுடன் பா.ஜ.க நிர்வாகிகள் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து சுகாதார அலுவலர் சோனியை அலுவலகத்துக்கு வெளியே இழுத்துவந்து பா.ஜ.வினர் இழுத்து வந்து தாக்கியுள்ளனர். நீளமான கம்புகளைக் கொண்டு அவரை தக்கியதால் பலத்த காயமடைந்த சோனி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பந்தப் பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

”பா.ஜ.கவினர் இப்படி தொடர்ந்து அரசு அதிகாரிகளை தாக்குவது கண்டிக்கத்தக்கது. அதிகாரிகள் மீது தவறு இருக்கும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தவேண்டும், இல்லையெனில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இதை செய்யாமல் அதிகாரிகளை கும்பலால் தாக்குவது ஜனநாயக விரோதமானது” என அரசு ஊழியர்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories