வைரல்

பத்திரிகையாளர் ”வாயில் சிறுநீர் கழித்து” உத்தரபிரதேச போலீசார் அராஜகம்! (வீடியோ)

செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளரின் மீது சிறுநீர் கழித்து உத்தரபிரதேச போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பத்திரிகையாளர் ”வாயில் சிறுநீர் கழித்து” உத்தரபிரதேச போலீசார் அராஜகம்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் ஷாம்லி மாவட்டத்தில் ரயில் தடம் புறண்ட செய்தியை சேகரிக்க தனியார் தொலைக்காட்சியின் பத்திரிக்கையாளர் அமித் ஷர்மா சென்றுள்ளார். அவரை அம்மாநிலத்தின் ரயில்வே போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையின் போது அங்கு கூடியிருந்த 5-க்கும் மேற்பட்ட போலீசார் அவரை சுற்றிவைத்துக் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு உ.பி மாநில பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து செய்தியாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஆங்கில தொலைக்காட்சிக்கு பத்திரிக்கையாளர் அமித் ஷர்மா பேட்டியளித்தார். அந்த பேட்டியின் போது அவர் கூறியதாவது,” செய்தி சேகரிக்கச் சென்ற என்னை ரயில்வே போலீஸார் தொடர்ந்து சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டார்கள். அவர்கள் சிலர் சீறுடையில் கூட இல்லை.

மேலும் அவர்கள் முதலில் என்னிடம் பேசும் போது என் போனை கீழே தள்ளிவிட்டனர். அப்போது எனது போனை எடுக்க நான் கீழே குனிந்து எடுக்கும் போது இன்னும் வேகமாக தாக்குதலில் ஈடுபட்டார்கள்.

பின்னர் என்னை இழுத்துவந்து போலீஸ் காவலில் வைத்தனர். அப்போது லாக்-அப்-ல் என்னை தாக்கிய போலீஸார் ஆபாச வார்த்தைகளை பேசி என் துணிகளை அவிழ்க்கும் படி அடித்தார்கள். நான் தொடர்ந்து மறுத்ததையடுத்து, என் வாயில் சிறுநீர் கழித்து என்னைக் கொடூரமாக சித்திரவதை செய்தனர்.” என வேதனையுடன் தெரிவித்தனர்.

பத்திரிக்கையாளர் முற்றுகையை அடுத்து ஷர்மா இன்று காலை விடுவிக்கப்பட்டார். மேலும் கடந்த வாரம் போலீஸ் அதிகாரிக் குறித்து கட்டுரை எழுதியதற்காக குறிவித்து இந்த தாக்குதலில் போலீசார் ஈடுபட்டிருக்கலாம் என ஷர்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பின்னர் இந்த செய்தி பரவியதை அடுத்து, தாக்குதல் நடத்திய போலீஸார் மீது அம்மாநில காவல்துறை சம்பந்தபட்ட அதிகாரியான ஷாம்லி ராகேஷ் குமார் மற்றும் கான்ஸ்டபிள் சஞ்சய் பவார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். உத்தர பிரதேச காவல் துறைக்குக் கீழ்தான் ரயில்வே போலீஸ் இயங்குகிறது என்பது குறிபிடத்தக்கது.

உத்தர பிரதேசத்தில் சமிபத்தில் பொது இடத்தில், பத்திரிகையாளர் ஒருவரை போலீஸார் அடித்து இழுத்துச் சென்றார்கள். மேலும் சில நாட்களுக்கு முன்னர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து கூறியதாக குற்றம் சாட்டி பலர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பத்திரிக்கையாளர் மீது யோகியின் ஆட்சி தொடர் அடக்கு முறையில் ஈடுபட்டு வருகிறது. இந்த செயல் பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு ஆபத்தானது என பத்திரிக்கையாளர் பலர் கருத்துத் தெரிவித்து வருகினறனர்.

banner

Related Stories

Related Stories