வைரல்

இலங்கைக்கு புதிய காவல்துறை தலைவர் & பாதுகாப்புச் செயலாளர் நியமனம்!

குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக இலங்கையின் காவல்துறை தலைவரை பணிநீக்கம் செய்துள்ளது இலங்கை அரசு.

இலங்கைக்கு புதிய காவல்துறை தலைவர் & பாதுகாப்புச் செயலாளர் நியமனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈஸ்டர் நாளான ஏப்., 21 அன்று இலங்கையின் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர், பல்வேறு இடங்களில் இருந்து வெடிகுண்டுகளும், டெட்டனேட்டர்களும் கண்டெடுக்கப்பட்டதால் அந்நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது.

இலங்கைக்கு புதிய காவல்துறை தலைவர் & பாதுகாப்புச் செயலாளர் நியமனம்!

இந்நிலையில், புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதால் இலங்கையின் காவல்துறை தலைவர் ஜெய சுந்தராவை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று பணியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு கடந்த ஏப்., 24 அன்று அதிபர் சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதால் இலங்கையின் காவல்துறை தலைவர் ஜெய சுந்தராவை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று பணியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு கடந்த ஏப்.,24 அன்று அதிபர் சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு புதிய காவல்துறை தலைவர் & பாதுகாப்புச் செயலாளர் நியமனம்!

ஆனால் ஜெய சுந்தரா மறுத்துவிட்டதால், அந்நாட்டு நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு காவல்துறை தலைவரான ஜெயசுந்தரா பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே இலங்கையின் புதிய காவல்துறை தலைவராக, தற்போதைய காவல்துறை துணைத்தலைவராக உள்ள விக்ரமரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக இலங்கையின் பாதுகாப்புத் துறை செயலாளர் ஃபெர்னாண்டோ ராஜினாமா செய்ததை அடுத்து புதிய பாதுகாப்புத்துறை செயலாளராக முன்னாள் காவல்துறை தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories