வைரல்

தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜே.எம்.ஐ. அமைப்புகளுக்கு இலங்கையில் தடை! 

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜே.எம்.ஐ. அமைப்புகளுக்கு தடை விதித்தார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா.

தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜே.எம்.ஐ. அமைப்புகளுக்கு இலங்கையில் தடை! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இலங்கையில் ஈஸ்டர் அன்று கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இலங்கை ராணுவமும், போலீஸ் படைகளும் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா

இந்நிலையில், இலங்கையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளும் தடை செய்யப்படுவதாக அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்தார்.

banner

Related Stories

Related Stories