வைரல்

கூகுள் தகவல்களை அழித்த தானோஸ்? -“thanos” என டைப் செய்தால் மாயமாகும் தகவல்கள்!

கூகுளில் தானோஸ் என டைப் செய்தால் கூகுளில் தகவல்கள் மறைந்து போகும் மாயாஜாலம் நடக்கிறது.

Thanos
Thanos
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் சூப்பர் ஹீரோக்கள் படம் கொண்டாடப்படுகிறது. அப்படி சூப்பர் ஹீரோ படத்தில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுவரும் படம் தான் 'அவென்ஜர்ஸ்'. அந்த படத்தின் கடைசி பாகம் தற்பொழுது திரையங்குகளில் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் வெளிவந்த முந்தைய பாகம் "அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்". இந்த படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தின் பெயர் தான் தானோஸ். படத்தில் தானோஸ் கதாபாத்திரம் தன்னுடைய ஒரு கையில் க்ளோவ்ஸ் அணிந்திருப்பார். படம் அந்த க்ளோவ்ஸை மையப்படுத்தி இருக்கும் இறுதியில் அந்த கைகளில் விரல்களை மடக்கியதும் நொடிப்பொழுதில் உலகம் மறைந்துவிடும். பல முக்கிய ஹீரோஸும் மறைந்து விடுவார்கள்.

Thanos
Thanos

அதைக் குறிப்பிடும் விதமாக கூகுள் நிறுவனம் ‘அவென்ஜர்ஸ்’ படத்தில் வரும் தானோஸ் கதாபாத்திரம் அணிந்திருக்கும் க்ளோவ்ஸ் போல் ஒரு சின்னத்தை வைத்துள்ளனர். அதைக் கிளிக் செய்து பார்த்தால் அந்த பக்கத்தில் உள்ள சில தகவல்களை தேடும் லிங்க் ஒவ்வென்றும் முழுமையாக மறைந்துவிடுகிறது. நொடிப் பொழுதில் பல தகவல்கள் அளித்ததாக அதில் காட்டப்படுகிறது. இது படத்திற்கான விளம்பரம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நீங்களும் கூகுளில் ‘Thanos’ தனோஸ் என்று டைப் செய்து பாருங்களேன்..!

banner

Related Stories

Related Stories