வைரல்

“கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கு பழிவாங்கவே இலங்கை குண்டு வெடிப்பு” - இலங்கை அமைச்சர்

மார்ச் 15-ம் தேதி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் , துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர், அங்குள்ள இரண்டு மசூதிகளில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். அதில், 50 இஸ்லாமியர்கள் பலியாகினர்.

“கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கு பழிவாங்கவே  இலங்கை குண்டு வெடிப்பு” - இலங்கை அமைச்சர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இலங்கையில் 321 பேரை பலிகொண்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவம், நியூசிலாந்து நாட்டில் மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்க நடத்தப்பட்டது என இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ருவான் விஜயவர்தனே தெரிவித்துள்ளார்.

மார்ச் 15-ம் தேதி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர், அங்குள்ள இரண்டு மசூதிகளில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். அதில், 50 இஸ்லாமியர்கள் பலியாகினர்.

கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு
கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு

கிறிஸ்ட்சர்ச்சில் இஸ்லமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது, என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக, விஜயவர்தனே தெரிவித்துள்ளார்.

இலங்கை தாக்குதல் சம்பவத்தில் தேசிய தவ்ஹித் ஜமாஅத் என்ற அமைப்பின் சதி வேலை இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் இந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பேற்றுள்ளதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தனது செய்தி பிரிவான ‘Amaq’ மூலம் தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணையில் இன்னும் முழுமையான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories