வைரல்

விவிபேட் இயந்திரத்திற்குள் இருந்த பாம்பு : வாக்காளர்கள் பீதி ! 

கேரளா மாநிலம் கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட மயில்கண்டகை நகரில் உள்ள வாக்குச்சாவடியில் விவிபேட் இயந்திரத்தில் இருந்து பாம்பு ஒன்று வெளியே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  

விவிபேட் இயந்திரத்திற்குள் இருந்த பாம்பு : வாக்காளர்கள் பீதி ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கேரளா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் நடைபெற்றது.. இந்நிலையில் கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட மயில்கண்டகை நகரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்தனர்.

இந்நிலையில், வாக்களிக்க சென்ற ஒருவர் விவிபேட் இயந்திரத்தில் இருந்து சத்தமும், இயந்திரம் ஆடுவதுமாக இருந்ததை கவனித்துள்ளார். அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று வெளியே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் பயத்தில் பாம்பு என்று கத்த, வாக்களிக்க வரிசையில் இருந்த மக்களும், தேர்தல் அறையில் இருந்த அதிகாரிகளும் அலறியடித்து வெளியே ஓடினர். இதனையடுத்து, போலீசார் சென்று அந்த பாம்பினை வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

banner

Related Stories

Related Stories