வைரல்

கோழிக்குஞ்சை காப்பாற்ற போராடிய சிறுவன்;வைரலாகும் சிறுவனின் செயல் 

மிசோரம் மாநிலத்த சேர்ந்த சிறுவன் டெரெக்.தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கோழிக்குஞ்சு மீது மோதியுள்ளான். உடனடியாக அதனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளான். 

கோழிக்குஞ்சை காப்பாற்ற போராடிய சிறுவன்;வைரலாகும் சிறுவனின் செயல் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மிசோரம் மாநிலத்தின் சாய்ராங் பகுதியைச் சேர்ந்த சிறுவன் டெரெக்.தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு கோழிக்குஞ்சு குறுக்கே வந்துள்ளது. அதனை கவனிக்காத சிறுவன் சைக்கிளால் கோழிக்குஞ்சு மீது மோதியுள்ளான்.

அடிபட்ட கோழிக்குஞ்சை பார்த்து பதறிய சிறுவன், உடனடியாக அதனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளான். மேலும், தனது கையில் இருந்த சில 10 ரூபாய் நோட்டையும் அச்சிறுவன் கோழிக்குஞ்சின் சிகிச்சைக்காக எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்க கூறியுள்ளான்.

கோழிக்குஞ்சை காப்பாற்ற போராடிய சிறுவன்;வைரலாகும் சிறுவனின் செயல் 

ஒரு கையில் கோழிக்குஞ்சுடனும், மறுகையில் பணத்துடனும் சிறுவன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

எனினும், அந்த கோழிக்குஞ்சு இறந்துவிட்டதை சிறுவனின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். “அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. மற்றவர்களை விட தனித்துவமாக இருக்கிறான்” என்று சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.

எனினும், பலரும் சிறுவனின் இரக்கத்துக்கு பாராட்டுகளை குவித்துவருகின்றது

banner

Related Stories

Related Stories