
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. த.வெ.க. அரசின் சாதனைத் திட்டங்கள் என்று பத்திரிகைகள் பாராட்டி எழுதுவதற்குப் பதில், கொலை, கொள்ளை, வன்கொடுமை எனத் தினந்தோறும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஒரு திட்டத்தின் முக்கியத்துவம், அதனால் மக்களுக்கு என்ன பயன் என்பது பற்றி ஆய்வு செய்வதற்குப் பதில், எத்தனை கொலைகள் நடந்துள்ளன எனப் பத்திரிகையாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கு முன்பு இப்படி ஒரு ஆட்சியை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்.
தி.மு.க. ஆட்சியில் மகளிர் விடியல் பயணத் திட்டத்தால் இத்தனை மகளிர் பயனடைந்தனர், கல்லூரி மாணவர்கள் பயன்பெற்றனர் எனச் செய்திகள் வந்தன. ஆனால் இன்றோ, பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் மாயம், த.வெ.க. நிர்வாகி வீட்டில் போதைப்பொருள், வன்கொடுமை என்ற செய்திகள்தான் அதிகம் இடம்பெறுகின்றன.
இன்றுகூட திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண், பெண் என இருவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஆகாஷ் என்ற மயான ஊழியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இப்படித் தினந்தோறும் கொலைகள் நடந்தேறிக்கொண்டேதான் இருக்கின்றன.
இந்நிலையில், சட்டம்-ஒழுங்கிற்குச் சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்தச் சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக் கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டுப் புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்துச் சமாளிக்கப் போகிறாரா Dummy CM? ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம்-ஒழுங்கிற்குச் சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்தச் சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது.
இனியாவது பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டுவிட்டு, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன்வர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.






