தமிழ்நாடு

“பத்திரிக்கைகளைப் பற்றி இப்படிப் பேசக் கூடாது” : பேரவையில் தவெக அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய தி.மு.க!

பத்திரிக்கைகளை அவமதிக்கும் வகையில் பேசிய த.வெ.க. அமைச்சர் கீர்த்தனாவுக்குக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

“பத்திரிக்கைகளைப் பற்றி இப்படிப் பேசக் கூடாது” : பேரவையில் தவெக அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய தி.மு.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின், த.வெ.க. ஆட்சி வந்த பிறகு தமிழ்நாட்டின் முதலீடுகளும் பொருளாதாரமும் குறைந்து வருவதாகப் பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றைச் சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ”காசு கொடுத்தால் பத்திரிக்கைகள் எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள்” என ஒட்டுமொத்தப் பத்திரிகைகளையும் விமர்சிக்கும் வகையில் பேசினார்.

உடனே இதில் தலையிட்ட தி.மு.க. கொறடா எ.வ. வேலு, "ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை, தொலைக்காட்சி. அதனைக் கொச்சைப்படுத்தக் கூடாது. பணம் அளித்தால் எதை வேண்டுமானாலும் பத்திரிக்கையாளர்கள் எழுதிவிடுவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது," எனப் பதிலடி கொடுத்தார்.

பிறகு பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, "பொத்தாம் பொதுவாகப் பத்திரிக்கைகள் காசு வாங்கிக்கொண்டு எழுதுகிறார்கள் என்று அவையில் அமைச்சர் பேசக் கூடாது. காசு வாங்கிக்கொண்டு என்று பேசுவது ஒட்டுமொத்தப் பத்திரிக்கைகளையும் அவமதிப்பதாகும்," என அறிவுரை வழங்கினார்.

banner

Related Stories

Related Stories