தமிழ்நாடு

“எடப்பாடி TO சென்னை TO டெல்லி... இதுதான் பழனிசாமியின் கடந்த 5 ஆண்டு பணியாக இருந்தது..” - கனிமொழி எம்.பி!

தமிழ் தெரியவில்லை என்று ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டுக்கு வந்து வருத்தப்படும் பிரதமர் மோடிக்கு, மனம் இருந்தால் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளலாம் என்று ஜோலார்பேட்டை பரப்புரையில் கனிமொழி MP பேசியுள்ளார்.

“எடப்பாடி TO சென்னை TO டெல்லி... இதுதான் பழனிசாமியின் கடந்த 5 ஆண்டு பணியாக இருந்தது..” - கனிமொழி எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கவிதா தண்டபாணியை ஆதரித்து, ஜோலார்பேட்டை - புதுப்பேட்டை பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது மக்கள் மத்தியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது :-

நமது திமுக வேட்பாளர் கவிதா தண்டபாணி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மக்களாகிய நீங்கள்தான் வெற்றி பெறச் செய்ய வேண்டும். உதயசூரியனுக்காக, உச்சி வெயிலிலும் இவ்வளவு பேர் கூடிவருவது, கவிதா தண்டபாணியின் வெற்றிக்கான கூட்டமாகவே நான் பார்க்கிறேன்.

இந்த தேர்தலில் வெற்றி என்பது திமுக கூட்டணிக்கு உறுதியான ஒன்று. தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் திராவிட மாடல் ஆட்சி வர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய பிறகே உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறோம்.

ஆனால், நமக்கு எதிரில் இருக்கும் அதிமுகவினர் வாக்கு கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றி வருகின்றனர். ஆட்சியில் இல்லாதபோது எடப்பாடி பழனிசாமி, 5 ஆண்டுகள் காணாமல் போய்விட்டார். எடப்பாடியிலிருந்து சென்னைக்கு வருகிறார்; சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்திக்கிறார். இதையேதான் கடந்த 5 ஆண்டுகளாக பழனிசாமி செய்து வருகிறார்.

அதனால் தான் இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமான தேர்தல் என்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகிறார்கள். மும்மொழிக் கொள்கையை பின்பற்றவில்லை என்றால், பள்ளி மாணவர்களின் கல்விக்கான நிதியை ஒதுக்கமாட்டோம் என்று ஒன்றிய பாஜக பிடிவாதம் பிடிக்கிறது. இதனால், நமது பள்ளி மாணவர்களுக்கான ரூ.3,458 கோடி நிதி வரவில்லை.

ஒவ்வொரு முறையும் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வரும்போது, தமிழ் தெரியவில்லை என்று வருத்தப்படுகிறார். நீங்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. கற்றுக்கொள்ளும் எண்ணம் இருந்தால் கற்றுக்கொள்ளலாம்; கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

நாடாளுமன்றத்தில் ஒரு திட்டத்தின் பெயரைப் படிக்க வேண்டியிருந்தாலும் திணற வேண்டிய நிலை உள்ளது. “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்” என்று இருந்ததை, இன்று “Mahatma Gandhi National Rural Employment Guarantee Act” என்று இருந்ததை, இப்போது மாற்றியிருக்கிறார்கள். விக்சித் பாரத்-ரோஸ்கர் மற்றும் அஜீவிகா மிஷன். இது யாருக்காவது புரியுதா? இல்லை.

“எடப்பாடி TO சென்னை TO டெல்லி... இதுதான் பழனிசாமியின் கடந்த 5 ஆண்டு பணியாக இருந்தது..” - கனிமொழி எம்.பி!

வருவாய் வரம்புக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் இலவச உதவித் திட்டத்திற்குப் “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” என்று பெயர் வைத்துள்ளனர். “உஜ்வாலா” என்றால் என்ன, “யோஜனா” என்றால் என்ன என்பது பலருக்கும் புரியாது; “பிரதான் மந்திரி” என்பதுதான் புரிகிறது.

திருத்தப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா. தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமீன் யோஜனா. இது என்ன என்று கிராமத்தில் இருக்கும் யாருக்காவது புரிந்து, அந்த திட்டத்தை பயன்படுத்த முடியுமா? முடியாது. ரயில்வே நிலையங்களில் நமது ஊரின் பெயரை எழுதிக் காட்டுவதில் கூட ஹிந்தியை திரும்பத் திரும்ப திணித்து கொண்டிருக்கிறார்கள்.

வட இந்தியாவில் தேர்தல் நடைபெறும்போது, அங்குள்ள மக்களிடம் தமிழ்நாட்டில் வட இந்தியாவில் இருந்து வேலைக்காக வரும் மக்களை மோசமாக நடத்துகிறார்கள், தாக்குகிறார்கள் என்று தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் இழிவுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேசுகிறார்.

ஒடிசா தேர்தலின்போது, “தமிழன் ஏன் இங்கே வர வேண்டும்?” என்று பேசினார். ஆனால் இன்று தமிழ்நாட்டுக்கு வந்து, “நான் தமிழ் கற்க வேண்டும், நான் தமிழனாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார். தேர்தலுக்கு தேர்தல் தங்களுடைய நிலைப்பாட்டையும், சாயலையும் மாற்றிக் கொண்டிருக்கிறவர்கள்தான் பாஜகவினர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? இனிமேல் நான் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றார். ஆனால் இந்தத் தேர்தலில் அதையே மறந்துவிட்டார். அவர் எதைச் சொன்னாலும் மறந்துவிடுகிறார்.

2016 தேர்தலில் செல்போன் கொடுக்கிறோம் என்று ஒரு வாக்குறுதி கொடுத்தார்கள். 27வது வாக்குறுதியாக இலவசமாக கைப்பேசி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் யாருக்கும் இலவச கைப்பேசி கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்றமாட்டார். அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கு சரியான படத்தை புகட்டவேண்டும்.

இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் தலைவராக பழனிசாமி நீடிப்பாரா? இல்லை எதாவது மாநிலத்திற்கு ஆளுநராக போவாரா? என்று தெரியவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தால், அந்த கட்சியையே அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

“எடப்பாடி TO சென்னை TO டெல்லி... இதுதான் பழனிசாமியின் கடந்த 5 ஆண்டு பணியாக இருந்தது..” - கனிமொழி எம்.பி!

தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் அது நமது முதலமைச்சரால் தான் முடியும் எனத் தெரிந்தே ஓபிஎஸ் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்திருக்கிறார். அதேபோல பல்வேறு கட்சிகளில் இருந்தும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் திமுகவில் சேர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். பத்து தோல்வி பழனிசாமிக்கு, இந்த தேர்தல் 11-வது தோல்வியாக இருக்கும்.

இந்த தொகுதியின் எதிர்க்கட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தவர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். தேர்தல் அலுவலகத்தையும் தாக்கியிருக்கக்கூடிய ஒரு குற்றச்செயல் நடந்திருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் நிலையிலேயே இவ்வளவு அராஜகம் நடந்தால், இவர்கள் கையில் அதிகாரம் சென்றால் என்ன ஆகும்? தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பிடி மண்ணுக்கூட கிடைக்காது.

இந்தத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

திமுக கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்திய ஆட்சி, பெண்களுக்கான ஆட்சியாக பெரிய அளவில் செயல்பட்டுள்ளது. பெண்களுக்காக நமது முதலமைச்சர் மகளிர் உரிமைத் தொகையை வழங்குவோம் என்று அறிவித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

மகளிர் உரிமைத்தொகை அது ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டாயிரமாக உயர்த்தி வழங்கப்படும். 'உங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ளும் உரிமை உங்கள் கைகளில்தான் உள்ளது’ என்று ரூ.8000 மதிப்பிலான கூப்பனை வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தாயுமானவர் திட்டம், வயது முதிந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் இவங்களுக்கெல்லாம் வீடு தேடி கொண்டு வந்து ரேஷன் பொருட்களை தரக்கூடிய திட்டம்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், " ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க அரசு செய்த வளர்ச்சிப் பணிகள் : ரூ.29.65 கோடி மதிப்பில் இரயில்வே கடவு எண். 91 (குடியான்குப்பம்) சாலை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.20.82 கோடி மதிப்பில் கடவு எண்.95 (பச்சூர்) சாலை மேம்பால கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

பச்சூரில் உள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. 43 கி.மீ. நீளத்திற்கான 13 சாலைப் பணிகள் ரூ.23 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்தனாவூர் கால்நடை மருந்தகம் கட்டடம் ரூ.54 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் கால்நடை மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்பட இருக்கிறது, நீர் நிலைகள் தூர்வாரப்படும் உள்ளிட்ட செயல்படுத்தப்பட உள்ளன.

மக்களுடைய கோரிக்கைகளை அவர்கள் கேட்பதற்கு முன்பே நிறைவேற்றுவதற்கே தேர்தல் வாக்குறுதிகள் தயார் செய்யப்பட்டது . முதலமைச்சர் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்." என்றார்.

    banner

    Related Stories

    Related Stories