
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதோடு 5 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு 5 மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டில் திமுக கூட்டணியில் இணைந்த கட்சிகள் இந்த முறையும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளதோடு, புதிய கட்சிகளும் கூட்டணியில் இணைந்துள்ளது.
இதையடுத்து பேச்சுவார்த்தைகள் முடிந்ததை அடுத்து தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
ம.தி.மு.க
1. மொடக்குறிச்சி
2. மதுரை தெற்கு
3. கடையநல்லூர்
4. சீர்காழி (தனி) - தனிச் சின்னம்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
1. பாபநாசம்
2. வாணியம்பாடி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்)
1. திருச்செங்கோடு
2. பொள்ளாச்சி
மனித நேய மக்கள் கட்சி (உதயசூரியன்)
1. நாகப்பட்டினம்
2. மணப்பாறை
முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்)
1. சிவகங்கை
மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்)
1. சிதம்பரம்
எஸ்.டி.பி.ஐ. கட்சி (உதயசூரியன்)
1. நன்னிலம்
தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்)
1. நத்தம்




