
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (13.1.2026) சென்னை, கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், பல்வேறு விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, பொங்கல் திருநாளையொட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்திவரும் தமிழ்நாடு அரசிற்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு, கடந்த 5 ஆண்டுகளில் - வேளாண்மைத் துறைக்காக ஐந்து தனி நிதி நிலை அறிக்கை அளித்து 1.94 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 54,701 ஏக்கர் தரிசு நிலங்கள் சாகுபடிக்கு உகந்ததாக மாற்றம்;
‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண்மை, பசுந்தாள் உரமிடுதல், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்ற செயல்பாடுகளுக்கு ரூ.320 கோடி நிதி ஒதுக்கீடு, குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்திற்கு ரூ. 481 கோடி ஒதுக்கீடு, விவசாய நிலங்களுக்கு புதிதாக 1.82 இலட்சம் மின் இணைப்புகள், பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் 37 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ. 6,049 கோடி இழப்பீடு;

பருவமழை காலங்களில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட 33.84 இலட்சம் ஏக்கரில் ஏற்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர் சேதத்திற்கு ரூ.1,924 கோடியில் 25 இலட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ் 25 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.19 கோடி செலவில் காய்கறி, பழச்செடி மற்றும் பயறுவகை விதைத்தொகுப்புகள்;
நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 4.9 இலட்சம் எக்டரில், 3,915 கோடி ரூபாய் மானியத்தில் 5 இலட்சம் விவசாயிகளுக்கு நுண்ணீர்ப்பாசனம் அமைப்புகள், தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.766 கோடி நிதி மானியம், 213 ஒழுங்குமுறை விற்பனைகூடங்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் இணைப்பு மூலம் மொத்தம் ரூ.8,388 கோடி மதிப்பில் 29 இலட்சம் மெ.டன் வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனை, ரூ.7.53 கோடியில் 14 புதிய உழவர் சந்தைகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் இயந்திர வாடகை மையங்கள் நிறுவிட ரூ.587 கோடி மானியம்;
சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் ரூ. 80 கோடி மானியம், 8,371 கி.மீ. சி மற்றும் டி கால்வாய் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது, முதலமைச்சரின் உழவர்நல சேவை மையத்தின் மூலம் ரூ.91 கோடி வங்கி கடன் உதவிகள் போன்ற பல்வேறு திட்டங்களை வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காக சீரிய முறையில் செயல்படுத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, பல்வேறு விவசாய அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் நிருவாகிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினையும், பொங்கல் நல்வாழ்த்துகளையும் இச்சந்திப்பின்போது தெரிவித்துக்கொண்டனர்.
அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், விவசாய சங்க நிருவாகிகளுக்கு தன்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.






