தமிழ்நாடு

“பா.ஜ.க-வின் ஊதுகுழல் அன்புமணி” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்!

பா.ஜ.க-வின் ஊதுகுழலாக அன்புமணி செயல்படுகிறார் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

“பா.ஜ.க-வின் ஊதுகுழல் அன்புமணி” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க மற்றும் நகர தி.மு.க சார்பில் ’என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று கழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ”கமராஜர் இலவச ஆரம்ப கல்வியை தொடங்கினார். அதன் பிறகு நமது கலைஞர் உயர்கல்வியை இலவசமாக்கினார். அதன் பிறகுதான் பின்தங்கிய சமூகத்தில் இருந்த மாணவர்கள் கல்வியில் முன்னேறத் தொடங்கினர்.

தற்போது கலைஞர் வழியில் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் இன்று அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி படிக்கும் நிலையை நமது திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தபோது எல்லோரும் ரூ.1000 உரிமைத் தொகையை வழங்க முடியாது என சொன்னார்கள். ஆனால் அதை சாத்தியப்படுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தற்போது விடுபட்ட பெண்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் தமிழ்நாடு முழுவதும் 1.30 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

இப்படி மகத்தான சாதனை படைத்த இந்த திட்டத்தை அன்புமணி குறைசொல்கிறார். அ.தி.மு.க - பா.ஜ.க-வின் ஊதுகுழலாக அன்புமணி செயல்படுகிறார்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories