
அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் கல்வியிலும், மருத்துவத்திலும், சமூகநீதியிலும், பெண்ணுரிமையிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகப் பலவிதத் தடைகளை ஆர்.எஸ்.எஸ், ஒன்றிய பா.ஜ.க ஆட்சி, இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.
தற்போது, திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு துணை போகும் வகையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு அமைந்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.அப்பகுதியில் பதற்றத்தை தனித்து அமைதியை தமிழ்நாடு அரசு நிலைநாட்டியுள்ளது.
மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது. 100 ஆண்டுகளாக நடந்து வரும் தீபம் ஏற்றப்படும் இடத்தை திடீரென மாற்றிவிட்டு வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்சனையாக உள்ளது.
2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அரசு செயல்படுகிறது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? என மக்கள் முடிவு செய்வார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்.
மெட்ரோ இரயில், AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!
- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது” என தெரிவித்துள்ளார்






