தமிழ்நாடு

”பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல் செங்கோட்டையன்” : அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல் செங்கோட்டையன் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

”பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல் செங்கோட்டையன்” : அமைச்சர் ரகுபதி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க-வை, பா.ஜ.க-விற்கு இழுத்து வருவதற்காக செங்கோட்டையனுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர் பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல். இது உண்மையா? இல்லையா? என்பது விரைவில் தெரிந்துவிடும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இதுகுறித்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து தான் செயல்படுகிறார்கள் என்று கூறும் செங்கோட்டையனுக்கு நேற்று வரை புத்தி எங்கே போனது.

கர்சீப்பை கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு செல்லும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. இந்தியாவிலேயே இதற்கு தகுதியுடையவர் என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து காட்டி இருக்கிறார். ஏசி காரிலும் ’குப்’ என்று வேர்க்கும் அளவுக்கு கர்சீப்பை பயன்படுத்தியதை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போல் துணிச்சல் மிக்க, முதலமைச்சர்கள், தலைவர்கள் கிடையாது. திராவிட மாடல் அரசின் திட்டங்களை இந்தியா மட்டுமல்ல உலகமே பாராட்டுகிறது.

த.வெ.க-வை, பா.ஜ.க-விற்கு இழுத்து வருவதற்காக செங்கோட்டையனுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர் பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல். இது உண்மையா? இல்லையா? என்பது விரைவில் தெரிந்துவிடும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories