தமிழ்நாடு

ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!

பெங்களூருவில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பச்சென்ற வாகனத்தை 7 கோடியே 11 லட்சம் ரூபாய் பணத்துடன் கொள்ளை கும்பல் கடத்தி சென்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் செலுத்த 7 கோடியே 11 லட்சம் ரூபாய் பணத்துடன் சி.எம்.எஸ் வாகனம் சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென இன்னோவா காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் தங்களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எனக் கூறி, சி.எம்.எஸ். வாகனத்தை நிறுத்தியுள்ளனர். பிறகு ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என வாகனத்தில் இருந்த ஊழியர்களை அந்த கும்பல் கீழே இறங்க வலியுறுத்தியுள்ளது.

இதையடுத்து, அவர்களும் வாகனங்களில் இருந்து இறங்கியுள்ளனர். அப்போது இவர்களுடன் பேசிக் கொண்டு இருக்கும் போதே அந்த கும்பல் சி.எம்.எஸ் வாகனத்தில் ஏறி, பணத்துடன் இருந்த வாகனத்தை கடித்துச் சென்றனர்.

இது குறித்து உடனே சி.எம்.எஸ் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories