தமிழ்நாடு

”எதற்கும் நிதி வழங்காத ஒன்றிய அரசு” : அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு!

ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.

”எதற்கும் நிதி வழங்காத ஒன்றிய அரசு” : அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

100 நாள் வேலை திட்டம், ஜல் ஜீவன் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், கல்விக்கான நிதி என எதற்கும் நிதி வழங்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ”ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியை நிதியை வழங்காமல் உள்ளது.100 நாள் வேலை திட்டம், ஜல் ஜீவன் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், கல்விக்கான நிதி என எதற்கும் நிதி வழங்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

விஜய்-க்கு வேண்டுமானால் தி.மு.க நல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.கவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நல்லவர்களாக தெரிகிறார்கள். மக்களுக்கான பல நல்லத்திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது.

நாங்கள் உங்களைபோல் வேஷம் போடவில்லை. உண்மையாக நல்லவர்களாக இருப்பதால்தான் தி.மு.கவுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பொதுமக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories