தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதிலும் ’தியாகச் சுவர்கள்’ எழுப்பப்படும்! : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடல் உறுப்பு கொடையாளிகளை போற்றும் வகையில் அமைக்கப்பட்ட தியாகச் சுவரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.

தமிழ்நாடு முழுவதிலும் ’தியாகச் சுவர்கள்’ எழுப்பப்படும்! : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் நேற்றுin (06.11.2025) சென்னை, இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், உடல் உறுப்பு கொடையாளர்களை போற்றும் தியாகச்சுவரை திறந்து வைத்து, HAND IN HAND INDIA மற்றும் NORTHERN ARC CAPITAL சார்பில் ரூ.87.76 இலட்சம் மதிப்பீட்டில் 3 புதிய அவசர கால ஊர்திகள் 108 சேவையின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, சென்னை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார்கள்.

பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தியாகச் சுவர் (wall of honor) தொடக்கம் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, உடலுறுப்பு தானம் செய்த 253 தியாக சீலர்களுக்கு அவர்களது பெயர், ஊர் மற்றும் தேதி பொறிக்கப்பட்டுள்ள தியாகச் சுவர் (wall of honor) திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

உடலுறுப்பு தானத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு மூளைச்சாவு அடைந்தவர்களை மருத்துவ ரீதியாக சான்று அளிப்பதிலும் அவ்வாறு மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடலுறுப்புகளை தானமாக பெறுவதற்கு அவரவர் குடும்பத்தாரிடம் விருப்பத்தை கேட்டுப் பெற்று உடலுறுப்புகள் பெற்று தேவைப்படும் பயனாளிகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணத்தை அனைவரும் நன்றாக அறிவார்கள். 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 05 ஆம் தேதி அன்றைய தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் Transplant authority of tamilnadu (TRANSTAN) என்கின்ற அமைப்பை தொடங்கி தமிழ்நாடு அரசின் மூளைச்சாவு உறுப்புமாற்று சிகிச்சை திட்டத்தை அன்றைக்கு தொடங்கி வைத்தார்கள்.

இந்தியாவிலேயே முதன்முறையக வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் மூளைச்சாவு அடைந்தவர்களையும், உறுப்புக் கொடை பயனாளர்களை தேர்வு செய்வது போன்ற பணிகள் நெறிமுறைப்படுத்தப்பட்டு சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை TRANSTAN அமைப்பு தொடங்கப்பட்டதற்கு பிறகு மூளைச்சாவு அடைந்து உடலுறுப்புகளை கொடையாக வழங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை 253 பேர், இவர்களுடைய பெயர்கள், ஊர்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு wall of honour என்கின்ற வகையில் தியாகச் சுவர் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தலுக்கேற்ப, இந்தப் பணி தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் எங்கெயெல்லாம் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் உடலுறுப்பு தானம் பெறப்படுகிறதோ அங்கெயெல்லாம் இந்த தியாகச் சுவர் கட்டப்படவிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இங்கு தொடங்கப்பட்டுள்ளது.

இதுபோல் wall of honour என்பது குறிப்பாக அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்தவர்கள், வியட்நாம் போரில் உயிர்நீத்த அமெரிக்க போர் வீரர்கள் பெயர்கள் இதுபோன்றுதான் வரிசைப்படுத்தி அவர்களுடைய பெயர்கள் கல்வெட்டில் வைத்திருப்பார்கள். அதுபோல் இன்றைக்கு குறிப்பாக தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்தவர்களின் தியாகத்தை போற்றுகின்ற வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. 

தமிழ்நாடு முழுவதிலும் ’தியாகச் சுவர்கள்’ எழுப்பப்படும்! : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு - அரசு மரியாதை 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 2023 செப்டம்பர் திங்கள் 23 ஆம் தேதி உடலுறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்தார்கள். அந்தவகையில் உடலுறுப்பு தானம் செய்தவர்களின் திருவுடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற மாவட்ட அளவிலான அலுவலர்கள் அரசு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த திட்டத்தை அறிவித்தபிறகு இதுவரை  553 பேர் உடலுறுப்பு தானம் செய்து அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. இப்படி 2 ஆண்டுகளில் மட்டும் இவ்வளவு பேர் உடலுறுப்பு தானம் செய்திருப்பது என்பது இந்திய அளவில் தமிழ்நாடு தான் இன்றைக்கு முதலிடத்தில் இருக்கின்றது.

கடந்த 6 ஆண்டுகளாகவே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்ததற்கு பிறகு இந்திய அளவில் தமிழ்நாடு இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசின் பல விருதுகளை ஆண்டு தோறும் பெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டும் கூட அதிக அளவில் உடலுறுப்பு தானம் செய்தவர்கள் என்கின்ற வகையில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்தது.

இந்த திட்டம் அறித்தபிறகு இதுவரை உடலுறுப்பு தானம் பதிவு செய்திருப்பவர்கள் 23,189 பேர். இப்படி இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் இந்த சிறப்புக்குரிய திட்டத்திற்கு மேலும் நிறைவேற்றுகின்ற வகையில் wall of honour நிறுவப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் இதுபோல் நிறுவப்படவிருக்கிறது. 

சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வசதிகள் 

சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையைப் பொறுத்தவரை பல்வேறு சிறப்புகளை கொண்ட மருத்துவமனையாக இருந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக முன்னாள் மருத்துவ மாணவர்களின் சங்க அலுவலகம்  ஒன்றை திறந்து வைத்திருக்கிறோம். 

இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்பது உலகளவில் பழமை வாய்ந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.  ஏறத்தாழ 190 ஆண்டுகளை கடந்து 200வது ஆண்டை நோக்கி பயனித்து வருகிறது. ஆக இம்மருத்துவமனையில் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரு சங்கம் ஒன்று நிறுவப்பட்டு அந்த சங்கத்திற்கான அலுவலகம் கடந்த காலங்களில் இந்த மருத்துவமனையின் தொடக்க நிலையில் முதல்வர் அலுவலகமாக இருந்த அந்த அலுவலகம் இப்பொழுது அந்த சங்கத்திற்கான அலுவலகமாக இப்பொழுது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதே போல் இன்றைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் CSR மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியோடு தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் இந்த மருத்துவ நிர்வாகத்திற்கு கிடைத்துக் கொண்டு வருகிறது.

அந்த வகையில் தான் இன்றைக்கு கூட மூன்று வாகனங்கள் Hand in Hand India என்கின்ற அமைப்பின் CSR பங்களிப்பில் மூன்று 108 அவசர கால ஊர்திகள் இன்றைக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 

சென்னை அரசு இராஜிவ்காந்தி பொது மருத்துவமனையைப் பொருத்தவரை நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த மருத்துவமனையில் மட்டும் ரூ.74.50 கோடி மதிப்பிலான பல்வேறு கட்டிடங்கள் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் தொடர்ந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ரூ.1.69 கோடி மதிப்பீட்டில் ஒரு அவசர கால சிகிச்சை மையம், ரூ. 29.93 கோடி மதிப்பீட்டில் தொற்று நோய் சுவாச அவசர மற்றும் தீவிர பரமரிப்பு சிகிச்சைகளுக்கான பிரிவு,  அதேபோல்  மருத்துவர் ஓய்வு அறை மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அதோடு மட்டுமல்லாமல் சிறுநீரக அறுவை சிகிச்சை துறையில் நவீன மருத்துவ உபகரணங்கள் இன்டிரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் கருவி,  எக்கோ கருவி போன்றவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் ரூ.9.80 கோடி மதிப்பீட்டில் கதிரியக்க அலைவீச்சு கருவி மற்றும் மின்தூக்கிகள் மாற்றி அமைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது  இரத்த நாள அறுவை சிகிச்சை உயர் சிறப்பு நிலையம், தன்னியக்க நரம்பு மண்டல ஆய்வகம் இருதய நோய் சிறப்பு பரிசோதனை மற்றும் பல்வேறு வசதிகள்  திறந்து வைக்கப்பட்டது. மேலும் நவீன சமயலறை பல்வகை கைபேசி மின்னேற்ற நிலையம், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், தங்கும் அறை, வண்ண படுக்கை விரிப்புகள் மற்றும் நோய் தகவல் ஏடுகள்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவைகளையும் கடந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த மருத்துவமனையில் பெருகி வருகின்ற  மருத்துவச்சேவையை கருத்தில் கொண்டு, இதை இன்னமும் கூடுதலாக தரம் உயர்த்துவதற்கு ரூ.132.24 கோடி மதிப்பீட்டில் 2,53,543 சதுர அடி பரப்பளவில் 15 தளங்களுடன் கூடிய முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான விடுதி கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டுயிருக்கின்றது.

அதேபோல் ரூ.65 கோடி செலவில் 1,12,246 சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் கொண்ட நரம்பியல் துறை கட்டிடம் கட்டிடப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மிக விரைவில் அதற்கான உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. அதோடு தற்போது  ஏறக்குறைய ரூ.200 கோடிக்கான திட்டப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

மேலும் இம்மருத்துவமனையில் புறநோயாளிகள் தொடர்ச்சியாக அதிகமாக வரும் காரணத்தினால் மேலும் தரம் உயர்த்தும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி   செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

அந்தவகையில் “தியாகச் சுவர்” எனும் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை என்பதை பிற மாநிலத்தவர்கள் நம்மிடம் கேட்டறிந்து அவர்களும் அவர்கள் மாநிலத்தில் பின்பற்ற உள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

banner

Related Stories

Related Stories