
தமிழ்நாட்டில் போக்குவரத்து வசதியில்லாத கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், புதிய மினி பேருந்து திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து, தனியார் பேருந்து ஆப்ரேட்டர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழங்கின் விசாரணை உயர்நீதிமன்ற நிதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ஹேமன்சந்தன் கெளடா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த திட்டம் ஏற்கனவே அமலுக்கு கொண்டு வரப்பட்டு, 1,350 பேருந்துகள் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.500 விண்ணப்பங்கள் பரிசீலினையில் உள்ளது” என தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசின் புதிய மினி பேருந்து திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.






