தமிழ்நாடு

சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி காலமானார்...

சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி காலமானார்

சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி காலமானார்...
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாமக்கல் கிழக்கு மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று (அக்.23) காலை சுமார் 7.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

கொல்லிமலை வாழவந்தி நாடு எல்லை கிராய்பட்டி பகுதியில் வசித்து வந்த இவர், ஆரம்பத்தில் தொடக்கத்தில் திமுகவில் இருந்த இவர், மாற்றுக்கட்சிக்கு சென்றாலும், மீண்டும் தாய் கழகமான திமுகவிலேயே கடந்த 2003-ல் சேர்ந்தார்.

சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி காலமானார்...

பிறகு கடந்த 2006-ம் ஆண்டு சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு முதல் நாமக்கல் மாவட்ட கழக மாவட்டக் கழக துணைச் செயளாலராக இருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இந்த சூழலில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு கழகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories