தமிழ்நாடு

'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

'பெரியார் உலகம்' பணிக்காக ரூ.1.70 கோடி நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்மையில், செங்கல்பட்டில் திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது, திருச்சியில் திராவிடர் கழகம் சார்பில் உருவாகி வரும் பெரியார் உலகம் அமைக்கும் பணிக்காக தி.மு.க சார்பில், தி.மு.க நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், இன்று சென்னை பெரியார் திடலில் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.1 கோடியே 70 லட்சத்து 26 ஆயிரத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ”பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories