தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதல் முறை: Start Up நிறுவனங்களுக்காக கோவையில் உலகளாவிய மாநாடு... தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

இந்தியாவிலேயே முதல் முறை: Start Up நிறுவனங்களுக்காக கோவையில் உலகளாவிய மாநாடு... தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உலக அளவில் உயர்த்திடவும், அவற்றுக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும், இந்தியாவிலேயே முதல் முதலாக வருகிற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "அக்டோபர் 9 ஆம் தேதி உலக புத்தொழில் மாநாடு கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டினை முதலமைச்சர் தொங்கி வைக்க உள்ளார். இந்த மாநாட்டிற்கான லோகோவையும், இணைய தளத்தையும், துணை முதல்வர் அவர்கள் 26.04.2025 அன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்கள்.

மாநாட்டில் 39 நாடுகளில் இருந்து, 264 பங்கேற்பாளர்களுடன் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், ஒன்றிய அரசின் 10 துறைகளும், 10 மாநிலங்களின் அரசுத் துறைகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் 15 துறைகளும் பங்குபெற உள்ளனர். 1000 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளுடன், 315 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறை: Start Up நிறுவனங்களுக்காக கோவையில் உலகளாவிய மாநாடு... தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ள வில்லை. மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொறுபேற்ற பின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை ஊக்குவிக்க தலைமை செயல் அலுவலர் பதவியுடன் 70 க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து ஸ்டார்ட் அப் TN உருவாக்கப்பட்டது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க TANSEED நிதியுதவி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், இது வரை கடந்த 4 ஆண்டுகளில் 43SC/ST Start-Up நிறுவனங்கள் உட்பட 212 Start-Up நிறுவனங்களில், ரூ. 79 கோடியே 49 லட்சம் தமிழக அரசு முதலீடு செய்துள்ளது. அரசு முதலீடுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்களில் 68 நிறுவனங்கள் ரூ. 554 கோடியே 49 லட்சம் மதிப்பில் வெளி முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றுள்ளது, இதன் மூலம் 1000 க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

தனியார் முதலீட்டாளர்களையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இணைக்கும் TANFUND தளத்தின் மூலம் ரூ. 128 கோடியே 84 லட்சம் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. StartUpTNமூலம் நவீன வடிவமைப்பு உதவி மையம் -டிசைன் ஸ்டூடியோ கல்வி நிறுவனங்களில் – Pre Incubation Centers புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்ட - Mentor TN தளம் தனியர் முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டார்அப் நிறுவனங்களை இணைக்கும்- TAN FUND தளம் புத்தொழில் நிறுவனங்களை அறிமுகப்படுத்தும் Launch pad நிகழ்ச்சிகள் SC/ST தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க பெரியார் சமூக நீதி தொழில் வளர் மையம், Space Tech ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி நிதி உதவி ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீட்டில்- கிராமம் தோறும் புத்தொழில் மையம். 11 நகரங்களில் வட்டாரப் புத்தொழில் மையங்கள். என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறை: Start Up நிறுவனங்களுக்காக கோவையில் உலகளாவிய மாநாடு... தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழலை உருவாகியதால் 2021 இல் 2032 ஆக இருந்த ஸ்டார்அப் நிறுவனங்களின் பதிவு தற்போது 12171 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6063 நிறுவனங்களில் பெண்கள் நிறுவனர்களாக உள்ளனர். அதிமுக ஆட்சியில் ஸ்டார்அப் தர வரிசைப் பட்டியலில் கடைசியில் இருந்த தமிழ்நாடு 2021 இல் 3 ஆம் இடம் ஆன லீடர் விருதினை பெற்றது. 2022 ஆம் ஆண்டு சிறந்த செயல்பாட்டாளர் விருதினை பெற்று முதல் இடத்தை பெற்றது.

கழக அரசு பொறுப்பேற்ற 4 4 ஆண்டுகளில் 13 மாவட்டங்களில் 69781 ஏக்கர் பரப்பளவில் ரூ. 386 கோடியே 76 லட்சம் மதிப்பில் 17 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் 543.31 ஏக்கர் பரப்பளவில் ரூ. 419 கோடியே 58 லட்சம் மதிப்பில் 16 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

MSME துறையின் வெற்றிகரமான திட்டங்களால், கடந்த 4% ஆண்டுகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 133 கோடியே 26 லட்சம் மானியத்துடன், ரூ. 5 ஆயிரத்து 490 கோடியே 80 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 66,018 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் தலைசிறந்த புத்தொழில் சூழல் கொண்ட முதல் 20 இடங்களில் தமிழ்நாட்டினை கொண்டு வர வேண்டும் என்ற இலக்கோடு இந்த புத்தொழில் மாநாடு நடத்தப்படுகிறது அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories