தமிழ்நாடு

”தமிழ்நாட்டில் வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்படாது” : அமைச்சர் நாசர் திட்டவட்டம்!

வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என அமைச்சர் நாசர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

”தமிழ்நாட்டில் வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்படாது” : அமைச்சர் நாசர் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்திய புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தின் படி, வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா. மு. நாசர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் சா. மு. நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தினை ஒன்றிய அரசு திருத்தம் செய்து, ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம்,1995-னை 08.04.2025 அன்று நடைமுறைப்படுத்தியது.

இச்சட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து- உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தது. இதே போல் பல்வேறு தரப்பினரும் இச்சட்டத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இவ்வாறு தொடுக்கப்பட்ட இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் 15.09.2025 அன்று இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது.

தற்போது, மேற்கண்ட வக்ஃப் சட்ட திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, ஒன்றிய அரசு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்திய புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தின் படி, வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories