தமிழ்நாடு

ரூ. 4.28 கோடியில் விளையாட்டு அரங்கம் : சென்னையில் திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!

நௌம்பூர் பகுதியில் சன்னதி முதல் குறுக்குத் தெருவில் 31.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ. 4.28 கோடியில் விளையாட்டு அரங்கம் : சென்னையில் திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செப்.26 அன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-122 நந்தனத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 4.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

நந்தனம் முதல் பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 4.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட கால்பந்து மற்றும் கிரிக்கெட் டர்ஃப் மற்றும் 5 பிக்கிள் பால் டர்ஃப் உள்ளடக்கிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அரங்கில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒப்பனை அறை, அலுவலக அறை, 20 எண்ணிக்கையில் கண்காணிப்புக் கேமராக்கள், சிற்றுண்டிச்சாலை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வளசரவாக்கம் மண்டலம், வார்டு-143 மற்றும் 144க்குட்பட்ட நொளம்பூர் பகுதி சன்னதி முதல் குறுக்குத் தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் 31.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இந்த பாலமானது, சன்னதி முதல் குறுக்குத் தெருவில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 31.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 120 மீ. நீளம் மற்றும் நடைபாதையுடன் 12 மீ. அகலத்தில் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தால் மதுரவாயல், நொளம்பூர் மற்றும் முகப்பேர் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். மேலும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்

banner

Related Stories

Related Stories