தமிழ்நாடு

”பழனிசாமியால் அமித்ஷா இசம் ஆகிவிட்டது அதிமுக” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம் இப்போது பழனிசாமியால் அமித்ஷா இசம் ஆகிவிட்டது என கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.

”பழனிசாமியால் அமித்ஷா இசம் ஆகிவிட்டது அதிமுக” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் தீர்மான ஏற்பு பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கனிமொழி எம்.பி சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசுகையில், கன்னியாகுமரி மண் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடைய உரிமைகளுக்காக மக்களுடைய உரிமைகளுக்காக போராடக்கூடிய மண். தோல்சீலை போராட்டம் தொடங்கி தமிழ்நாட்டின் எல்லை போராட்டம் என போராடிய மண் இந்த மண்.

ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டின் உரிமைகள் எந்த அளவுக்கு தொடர்ந்த பறிபோகின்றன என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். நம்முடைய மாணவ பிள்ளைகள் படிப்பதற்கு நமக்கு தரவேண்டிய கல்வி நிதியை தர மறுக்கிறார்கள்.

இந்தியாவிலேயே கல்லூரிக்கு போக்கும் மாணவர்கள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பா.ஜ.க அரசு ’நீ இந்தி படி.. நாங்கள் சொல்லக்கூடிய விதத்தில் தான் நீங்கள் பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டும்’ என குலக்கல்வியை கொண்டுவர நினைக்கிறார்கள். இதை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதி ரூ.5000 கோடியை தருவேன் என மிரட்டுகிறார்கள்.

GST-யை கொண்­டு­வந்து தமிழ்­நாட்­டுக்கு வர வேண்­டிய நிதி எல்­லாம் அவர்­கள் வாரிக் கொண்டு சென்று விடு­கி­றார்­கள். தமிழ்நாட்டினுடைய உள்நாட்டு உற்பத்தி 9.2%.

ஆனால் அதி­லி­ருந்து நமக்கு அவர்­கள் தரு­கிற வரி பகிர்வு 4% தான். நம்­மி­ட­மி­ருந்து வாங்­கிக் கொள்­வது கிட்­டத்­தட்ட 10%. இப்படி வரியை வாங்கிக் கொண்டு, நம் மீது மொழியை திணிக்கிறார்கள்.

சமீபத்தில் கூட நாங்கள் யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கவில்லை என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். அதே மேடையில் அவரே அறிவியலை இந்தியில் படிக்க வேண்டும் மற்ற முக்கியமான பாடங்களை இந்தியில் படிக்க வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு மொழியை திணிக்க கூடிய ஒரு ஆட்சி நடக்கிறது.

இதை எதிர்த்து கேள்வி கேட்டால் நீங்கள் நக்சல், அர்பன் நக்சல். இந்தியாவுக்கு எதிராக செயல்படக்கூடியவர்கள் என கூறுகிறார்கள். ஆனால் உண்மையிலயே நாட்டுக்கு எதிராக செயல்படக்கூடியது ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான். பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு அதே மேடையில் ஆர்.எஸ்.எஸ் இன் பெருமைகளை எல்லாம் பேசினார்.

ஒரே ஒரு பெரிமையை மட்டும் அவர் விட்டுவிட்டார். சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக நாடாளுமன்றத்தை தாக்க சென்றது ஆர்.எஸ்.எஸ்தான். நக்சலைட் என்று சொல்கிறார்களே அவர்கள் யாரும் தாக்கவில்லை. பிரதமர் மோடி புகழ்ந்து பேசிய ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான் நாடாளுமன்றத்தை தாக்கியது.

எஸ்.ஐ.ஆர் என்பதற்கு ஸ்பெஷல் இன்டென்சிவ் ரிவிஷன் என்பதை மாற்றிவிட்டு, ஷா இன்டென்ஷன் ரிவிஷன் என்று அமித்ஷா எதை நினைக்கிறாரோ அதை செய்யக்கூடிய ரிவிஷனாக அது மாறிவிட்டிருக்கிறது.

”பழனிசாமியால் அமித்ஷா இசம் ஆகிவிட்டது அதிமுக” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

பீகாரில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் வரப்போகிறது. அங்கே ஆயிரக்கணக்கான வாக்குகள் ஒவ்வொரு தொகுதிகளிலும் காணாமல் போயிருக்கின்றன. இஸ்லாமிய மக்கள் வாழக்கூடிய தொகுதிகள், கிறிஸ்துவ மக்கள் வாழக்கூடிய தொகுதிகள், யார் யாரெல்லாம் அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்களோ அந்த தொகுதிகளில் இருக்கும் வாக்குகள் எல்லாம் காணவில்லை.

இது தேர்தல் கமிஷனை கையில் வைத்துக் கொண்டு நாட்டின் ஜனநாயகத்தை மக்களின் உரிமையை குழி தோண்டி புதைக்கக்கூடிய செயல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய அடிப்படை உரிமை என்ன? வாக்குரிமை அதை நம்மிடமிருந்து யாரும் பறித்து விடக்கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அந்த அடிப்படை உரிமையை நம்மிடம் இருந்து பறிக்கும் செயலைதான் பா.ஜ.க ஒவ்வொரு இடத்திலும் செய்து கொண்டிருக்கிறது.

அதிமுகவை துவங்கியது எம்.ஜி.ஆர். அவர் மேடைதோறும் அண்ணாயிசம் என்று சொல்லுவார்கள். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார் அமித்ஷா இசம் என்று சொல்கிறார். அதிமுகவின் ஹெட்குவாட்டர்சை இப்போது டெல்லிக்கு மாற்றிவிட்டார்கள். அமித்ஷாவிடம் கேட்காமல் அதிமுகவில் யாரும் மூச்சு விடுவதில்லை. இப்படி அதிமுகவை வழிநடத்தி கொண்டு இருக்கிறார் பழனிசாமி.

ஒவ்வாறு நாளும் மக்களுக்கான திட்டங்கள், தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்புகள், உயர்கல்விக்கான புதிய திட்டங்கள், நன் முதல்வன் திட்டம் என்று ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக இருக்கட்டும், புதிதான திட்டமாக இருக்கட்டும் அவற்றை செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய நல்லாட்சி தான் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி. இனிமேல் தமிழர்களின் துரோகிகளுக்கு தமிழர்களின் இனமானத்தை கெடுக்கக்கூடியவர்களுக்கு இங்கு இடமில்லை” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories