தமிழ்நாடு

பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!

பவள விழா கண்ட இயக்கம் என்ற பெருமையுடன் தி.மு.க.வின் முப்பெரும் விழா கரூரில் நாளை (செப். 17) நடைபெறுகிறது.

பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் - தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாள் – பெரியாரின் இலட்சியங்களை வென்றெடுத்திட பேரறிஞர் அண்ணாவால் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் என மூன்று சிறப்பு நிகழ்வுகளை போற்றும் கொள்கை திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழா தி.மு.க சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2025ஆம் ஆண்டிற்கான தி.மு.க முப்பெரும் விழா நாளை (செப். 17) நடைபெறுகிறது. கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிப்பட்டி எனும் இடத்தில் முப்பெரும் விழா எனும் கொள்கைத் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த இலட்சிய விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது பெயரிலான விருதுகளை வழங்கி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

பெரியார் விருது, தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவருமான கனிமொழிக்கு வழங்கப்பட இருக்கிறது. அண்ணா விருது மூத்த முன்னோடி சுப.சீத்தாராமனுக்கும், கலைஞர் விருது தி.மு.க.வின் நூற்றாண்டு கண்ட சோ.மா.இராமச்சந்திரனுக்கும் வழங்கப்படுகிறது.

பாவேந்தர் பாரதிதாசன் விருது மூத்த முன்னோடி குளித்தலை சிவராமனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் விருது திமுக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவர் மருதூர் இராமலிங்கத்திற்கும், மு.க.ஸ்டாலின் விருது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளர் பொங்கலூர் நா. பழனிசாமிக்கும் வழங்கப்படுகிறது.

முரசொலி அறக்கட்டளை சார்பில், முரசொலி செல்வம் பெயரிலான முதல் விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

முப்பெரும் விழா நிகழ்வுகளில் முத்தாய்ப்பாகத் தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கட்சிப்பணியைச் சிறப்பாகச் செய்து வருபவர்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நற்சான்றிதழும் பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளது.

தி.மு.க பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், முப்பெரும் விழாவுக்கு தலைமை தாங்குகிறார். தி.மு.க பொருளாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கரூர் மாவட்டச்செயலாளர் செந்தில் பாலாஜி வரவேற்புரையாற்றுகிறார்.

இலட்சிய வீரர்களாக 2026 தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் இந்த முப்பெரும் விழா என்றும் கரூரில் நாளை (செப். 17) நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவில் அலைகடலென ஆர்ப்பரித்து பங்கேற்றிடுமாறும் தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories