தமிழ்நாடு அரசுதுறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் உள்ள கள உதவியாளர் பதவிக்கான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள கள உதவியாளர் பதவிக்கான 1794 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை)-II-க்கான அறிவிக்கை, இன்று (03.09.2025) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் 03.09.2025 முதல் 02.10.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். கணினி வழித்தேர்வு முறையில் 16.11.2025 முற்பகல் மற்றும் பிற்பகலில் தேர்வு நடைபெறும்.” தெரிவிக்கப்பட்டுள்ளது.