தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம்... சென்னையில் எந்தெந்த இடங்கள் வழியாக கொண்டுசெல்லலாம்... விவரம் உள்ளே !

விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம்... சென்னையில் எந்தெந்த இடங்கள் வழியாக கொண்டுசெல்லலாம்... விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னையில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்திற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த விவரங்களை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் :

விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்திற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் 31.08.2025 அன்று விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான விநாயகர் சிலைகள் பக்தர்களால் கடற்கரைப் பகுதியில் உள்ள தீர்மானிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு வரப்பட உள்ளன.

1. ஶ்ரீனிவாசபுரம்- மயிலாப்பூர்

2. பல்கலை நகர் – திருவான்மியூர்

3. N 4 மீன்பிடி துறைமுகம் – புது வண்ணாரப்பேட்டை

4. பாப்புலர் எடை மேடை – திருவெற்றியூர்

விநாயகர் சிலைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுடன், பாதசாரிகளின் போக்குவரத்தும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, போக்குவரத்தின் அளவைப் பொறுத்து பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட உள்ளன.

விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம்... சென்னையில் எந்தெந்த இடங்கள் வழியாக கொண்டுசெல்லலாம்... விவரம் உள்ளே !

1. திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால், காந்தி சிலை, ஆர்.கே. சாலை சந்திப்பிலிருந்து (வலது புறம் திரும்பி), வி.எம். தெரு, லஸ் ஜங்சன், அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர். ரங்கா சாலை (வலது புறம் திரும்பி), பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி. ராமசாமி சாலை (இடது புறம் திரும்பி), செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, ஸ்ரீனிவாசா அவென்யூ (இடது திருப்பம்), ஆர்.கே. மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

2. அடையாறிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆர்.கே. மடம் சாலை, திருவேங்கடம் தெரு (இடது புறம் திரும்பி), வி.கே. ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை (வலது புறம் திரும்பி), ஆர்.கே. மடம் சாலை (இடது புறம் திரும்பி), தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை (இடது புறம் திரும்பி), கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ். சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே. சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

3. சிலை ஊர்வலம் ரத்னா கஃபே சந்திப்பைக் கடக்கும் போதெல்லாம், ஜாம் பஜார் காவல் நிலையத்திலிருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

4. சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும் போதெல்லாம், ஐஸ் ஹவுஸ் சந்திப்பிலிருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் பெசன்ட் ரோடு - காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்படும் அல்லது இடதுபுறம் GRH சந்திப்பை நோக்கி சென்று தங்களின் இலக்கை அடையலாம்.

5. அதேபோல், சிலையை கொண்டு வரும் வாகனங்கள் மட்டுமே கலங்கரை விளக்கத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம் சிலை கரைக்கும் இடத்திற்கு லூப் சாலை வழியாக அனுமதிக்கப்படும்.

6. விநாயகர் சிலையினை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

banner

Related Stories

Related Stories